Thursday , April 25 2024
Home / செய்திகள் (page 60)

செய்திகள்

News

தமிழ்க் குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா முழுவதும் போராட்டம்

ஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாக …

Read More »

மைத்திரி போகுமிடமெல்லாம் நடக்கும் அதிசயம்!

மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போகுமிடம் எல்லாம் மழை பெய்கிறது. அவருடன் பல இடங்களிற்கு சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் மழை பெய்தது. யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணத்திலும் மழை பெய்தது இவ்வாறு தெரிவித்தார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். சர்வதேச வடக்கு நீர் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வட மாகாண மக்கள் முகங்கொடுக்கும் நீர்ப் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆய்வு செய்தல் அதற்காக வழங்கக்கூடிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுகளை கண்டறிதல், …

Read More »

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை !

maithiri ranil

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமாக சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்த 26ம் திகதி …

Read More »

புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சி! 10 நாளில் 7 பேர் கைது

விசேட அதிரடி படை

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்குதல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த 10 நாட்களில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி – பளை வைத்தியர் டொக்டர் சின்னையா சிவரூபன் கடந்த 18ம் திகதி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். வைத்தியர் …

Read More »

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஓரிரு தினத்தில் நியமிப்போம் – கபீர் ஹாசிம்

கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒரு கட்சி ஆகும். அந்த வகையில் குடும்ப ஆட்சியை கொண்டு நடத்தாத ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விரும்ப கூடிய அல்லது மக்கள் ஆதரிக்க கூடிய ஒரு வேட்பாளரை நிறுத்தும். அதற்கான சுப நேரம் ஓரிரு தினங்களில் வரும். அதன்போது வேட்பாளரை நாம் நியமிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் …

Read More »

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க பின்வழியில் முயற்சிக்க கூடாது

ரவூப் ஹக்கீம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாக இருந்தால் அதுதொடர்பில் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும். மாறாக பின்வழியால் அதனை மேற்கொள்ள இடமளிக்கமாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More »

ஐ.தே.க. பிளவுப்படுத்த வேண்டிய தேவை சு.க.வுக்கில்லை

வீரகுமார திஸாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனத் தெரிவித்த அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, ஐ.தே.க உறுப்பினர்களே தமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது ‘ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தை பயன்படுத்தி …

Read More »

காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம்

கவனஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(28.08.2019) மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி போராட்டமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். குறிப்பாக அபிவிருத்தி …

Read More »

ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்

மனுவல் உதையச்சந்திரா

போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த ஓமந்தையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்துத் தரக்கோரி முன்னெடுக்கப் படவுள்ள  போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் வேண்டு கோள் விடுத்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு …

Read More »

பிரதமர் மாலைத்தீவு பயணம் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் மாலைத்தீவு பயணம் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.  

Read More »