Wednesday , January 16 2019
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

News

தேசிய ரீதியில் சாதித்த தமிழ் மாணவர்கள்…

இலங்கையின் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவை நெருங்கிய நேரத்தில் வெளியிடப்பட்டன. இதன்படி தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளியானது, உயிரியில் விஞ்ஞான பிரிவில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கலனி ராஜபக்ச பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சந்துனி விஜயகுணவர்தன வர்த்தக பிரிவில் …

Read More »

தமிழர்களை ஏமாற்றிய மைத்திரியின் அடுத்த தந்திரம்

வடக்கு கிழக்கிலுள்ள 14,769 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும், அவற்றில் 263.56 ஏக்கர் காணிகளை மாத்திரமே விடுவிக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கில் 12,200 ஏக்கர் அரச காணிகளும் 2,569 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் வசமுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் …

Read More »

மஹிந்த அணியிலிருந்து 15 பேர் ரணிலுடன் இணைவு

மஹிந்த அணியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைய உத்தேசித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்திருந்தார். இது …

Read More »

ஆளுநர் பதவிகளில் திடீர் மாற்றம்! மூவருக்கு ஆப்பு..

ஒன்பது மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், தற்போது ஆளுநர் பதவிகளில் உள்ள மூவரின் பதவி பறிபோகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மாகாண ஆளுநர்களுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் பின்னரே, ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சிலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், புதிய சிலருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே மூன்று பேரின் பதவி …

Read More »

சம்பந்தனிடம் மன்னிப்புக் கோரிய கரு ஜெயசூரிய!

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான குழப்பம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சபையில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. …

Read More »

படையினர் மக்களுக்கு உதவி வரும் காரணத்தை கூறும்: சி.வி

நாட்டின் அரசியல் குழப்பங்களை தீர்க்க இலங்கை நீதித்துறை சிறப்பாக செயற்பட்ட நிலையில், யுத்த குற்றங்கள் விடயத்திலும் நீதியை எதிர்பார்ப்பதாக வட. மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.சிக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 100 குடும்பங்களுக்கு முன்னாள் முதலமைச்சரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கில் …

Read More »

மீண்டும் ரணிலின் சகாக்களிற்கு வலை விரிக்கும் மைத்திரி அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களை தமது கட்சியில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது அதிருப்தியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி , ஹேஷா விதானகே , ஹெக்டர் அப்புஹாமி மற்றும் லக்ஷ்மன் விஜேமான்ன உள்ளிட்டவர்கள் அமைச்சுப் …

Read More »

வருகின்றது சுமந்திரனின் தீர்வு! எப்போது தெரியுமா?

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார். நவம்பர் 7ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே, …

Read More »

கிளிநொச்சியில் ரணிலின் அதிரடி உத்தரவு

வடக்கில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நிதியுதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்து மேற்படி நிவாரண உதவித்தொகையை அதிகரிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை உடனடியாக புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அவர் பணித்துள்ளார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு வார காலத்துக்கு தொடர்ந்து உலருணவுப் …

Read More »

முக்கியஸ்தரின் கட்டுப்பாட்டில் செயல்படும் சபாநாயகர்? அம்பலமான ரகசியம்

சபாநாயகர் கருஜயசூரிய, சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஆணை பற்றி பேசும் சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தும் சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு 54 …

Read More »
error: Content is protected!