Sunday , March 25 2018
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

News

கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தனி அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில் திராவிடத்தையும் அண்ணாவையும் டிடிவி விலக்கிவிட்டதாக கூறி சற்றுமுன் நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு ‘அம்மா முன்னேற்ற கழகத்தின் சி.ஆர்.சரஸ்வதி பதிலளித்துள்ளார். அவர் , ‘*திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்று நாஞ்சில் சம்பத் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே நாங்கள் பார்க்கிறோம்’ …

Read More »

ஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குக்றிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறுமா என்பது கேள்வியாக உள்ளது. மேலும், ஜெயலலிதா …

Read More »

கமல்-விஷால் திடீர் சந்திப்பு

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ திரைப்படம் நேற்று சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் …

Read More »

கடலுக்கடியில் உணவகம்; அசத்தும் நார்வே

நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒன்று கடற்கரை உணவங்கள். நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த உணவகம் அமைந்திருக்கும். அடுத்த ஆண்டு இந்த உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 100 வரை அமர்ந்து உணவருந்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த …

Read More »

ஆன்மிக இடமான இமயமலையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை

தனது குருவான பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலம் பாலம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Read More »

ரஷ்யாவில் வைர மழை பொழிந்த விமானம்!

ரஷ்யாவில் புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்கம் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து சில நொடிகளில் தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சரக்கு விமானம் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான …

Read More »

அமைச்சர் பேசும் பேச்சா இது? வைரல் வீடியோ

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை வர்ணனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றே பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், …

Read More »

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவது உறுதி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கைச்சாத்தினைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். அத்துடன் இந்த பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரேரணை எதிர்வரும் 20ஆம்இ 21ஆம் அல்லது 22ஆம் திகதிகளில் ஏதாவதொரு தினத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் …

Read More »

உணவில் மலட்டுத்தன்மை மாத்திரை உண்மைக்குப்புறம்பான பிரசாரம்

உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது என இலங்கையின் சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞான ரீதியில் இந்தக் கூற்று எந்த விதத்திலும் அடிப்படையற்றது என்றும் கூறியுள்ளனர். இலங்கை வைத்தியர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. இலங்கையின் 134 சிரேஷ்ட மருத்துவ நிபுணர்களின் கையொப்பத்தில் வெளியான அறிக்கை இங்கு வெளிடப்பட்டது. …

Read More »

சர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள்! கஜேந்திரகுமார் கோரிக்கை

சர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் குற்றவிலக்களிப்புக் கொடூரம் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் மன்றம் ஒன்றை அமைத்து அதனிடம் கையளியுங்கள. இலங்கையில் மனித உரிமைகள் …

Read More »
error: Content is protected!