Thursday , March 28 2024
Home / செய்திகள் (page 447)

செய்திகள்

News

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் – டி.டி.வி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நேற்றிரவு கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் …

Read More »

டி.டி.வி. தினகரன் கைதை தொடர்ந்து மேலும் பல பெரிய தவறுகள் வெளிவரும் – மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்தனர். கைதை தொடர்ந்து மேலும் பெரிய தவறுகள் வெளிவரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். அது தான் உச்சம் என்று சொல்ல முடியாது. மேலும் இது …

Read More »

விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி – கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் – மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்,. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய மாநில அரசுகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் விவசாயப் பெருங்குடி மக்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மூலம் தி.மு.க. முன்னெடுத்த முழு அடைப்புப் …

Read More »

குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் 64 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 17 இளநிலைப் பொறியாளர்களை தேர்வு செய்யும் பணி அண்ணா பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம், கடந்த 29.01.2017 அன்று எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் 1:5 …

Read More »

சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் – கே.பி.முனுசாமி

சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் உருவாகியுள்ளதால் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கே.பி.முனுசாமி கூறினார். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் தொடங்குகிறது. இதில் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி அணி சார்பில் தலா 7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பேசுகிறார்கள். அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று தொடங்குவதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் இன்று காலை ஆலோசனை நடத்தினார்கள். கிரீன்வேஸ் சாலையில் …

Read More »

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றி – வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றியை தேடித் தந்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி மாநகராட்சி முன்பு ஒரே மாநகராட்சியாக இருந்தது. 2012-ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் …

Read More »

ஏஞ்சலே மார்க்கல் உடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் திடீர் ஆலோசனை

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியா, ஏமன் மற்றும் வடகொரியா விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசினார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் சூழல் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தினர். மற்றும் வடகொரியா …

Read More »

534 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த ‘நாசா’ வீராங்கனை: டிரம்ப் வாழ்த்து

534 நாட்கள் விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி சுட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் பெக்கி விட்சன் (57) நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். …

Read More »

எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான்கள் வெறியாட்டம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் 8 போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தாக்ஹர் மாகாணத்தில் உள்ள தார்குவாத்தில் நேற்று போலீசார் மற்றும் தாலிபான் தீவிராவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 8 போலீசார் பலியாகினர். மேலும், 3 போலீசார் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரை சுட்டுக் கொன்றது மட்டுமல்லாமல் தார்குவாத் மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு …

Read More »

முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்ற மறுப்பு – விவசாயக் காணிகளை விடுவிக்க இணக்கம்

மன்னார்- முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கு இணங்கம் காணப்பட்டுள்ள போதிலும், கடற்படை முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, சிறைச்சாலைகள் மறுசீரமைப்ப, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன …

Read More »