Saturday , April 20 2024
Home / செய்திகள் (page 445)

செய்திகள்

News

தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஏற்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய …

Read More »

மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்கு தடை

மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால்,பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தில் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மத்திய மாகாண …

Read More »

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கி …

Read More »

வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள்!

வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள் அரசியல் கட்சிகள் * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி * தமிழர் விடுதலைக் கூட்டணி * ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் * அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் * புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அமைப்புக்கள் * வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் * மட்டக்களப்பு சிவில் சமூகம் * அம்பாறை முஸ்லிம்கள் …

Read More »

தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டிதான் சரியான தீர்வு! – அவரின் நினைவுப் பேருரையில் அமைச்சர் ராஜித எடுத்துரைப்பு

தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இந்த நாட்டுக்குப் பொருத்தமானது என்று அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் ‘தந்தை செல்வா நினைவுப் பேருரை’ நேற்று மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த …

Read More »

வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு கஜேந்திரகுமார் அணியும் ஆதரவு!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அழைப்புக்கு அமைய வடக்கு, கிழக்கில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் முன்னணியினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “போர்க்காலத்திலும், போரின் முடிவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் போர் முடிந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும்கூட எதுவும் தெரியாத நிலையே நீடிக்கின்றது. காணாமல் …

Read More »

ஏமாற்றும் அரசுக்கு எதிராக ஒன்றித்துப் போராடுவோம்! – யாழ். பல்கலைக்கழக சமூகம் அழைப்பு

வடக்கு, கிழக்கில் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன அறிவித்துள்ளன. யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரை காலமும் காத்திருந்த உறவுகளுக்குத் தற்போதைய அரசும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. எனவே, அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் …

Read More »

ஹர்த்தாலை ஆதரிப்பது நமது கடமை! – மாவை எம்.பி. தெரிவிப்பு

தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: மாவை

காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் நாளை வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “இராணுவத்தை எதிர்த்துப் போராடிய இளையோர், குடும்பஸ்தர்கள் ஆயிரக்கணக்கில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இராணுவம் சரணடையுமாறு பகிரங்கமாக அறிவித்தது. போர்க் காலத்தில் அவ்வாறான போராளிகளும் பொதுமக்களும்கூட இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் கைதுசெய்த …

Read More »

வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்! – துரைரெட்ணசிங்கம் எம்.பி. கோரிக்கை

வடக்கு, கிழக்கில் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும், இந்தப் போராட்டத்தை அரசு கண்டுகொள்வதாக இல்லை. எனவே, அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்தும், எமது உறவுகளின் …

Read More »

நாங்கள் வெற்றி பெற்றால் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வோம்: தொழிலாளர் கட்சி அறிவிப்பு

பிரிட்டன் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு கொண்டு வந்துள்ள பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய பிரெக்சிட் கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே, அதாவது ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரசா மே முடிவு செய்து நேற்று அறிவிப்பை …

Read More »