Friday , April 19 2024
Home / செய்திகள் (page 444)

செய்திகள்

News

அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது, நாம் தனித்தே செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.செம்மலை தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, முன்னாள் எம்.பி. …

Read More »

சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து

சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனால் இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு செயல்படுகிறது. சசிகலாவின் தலைமையை ஏற்க பிடிக்காமல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை நிரூபித்த சசிகலாவின் ஆதரவு அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் …

Read More »

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 9.50 மணிக்கு அறிவாலயம் வந்தார். அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் …

Read More »

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற உறுப்பினராக கலைஞர் 60 ஆண்டுகள் பணியாற்றியதையொட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக …

Read More »

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை – கேரளாவில் ஒருவர் கைது

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந்தேதி நடந்த கொலை- கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடநாடு எஸ்டேட்டிற் குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூரை படுகொலை செய்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் ஜெயலலிதாவின் அறைக்குள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து …

Read More »

சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணிப்பு

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகளவில் சீனாவின் படை பலம் அபாரமானது. ஆண்டுதோறும் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்மூலம் ஆயுதக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது. சீனாவிடம் ‘சி.என்.எஸ். லயனிங்’ என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் மட்டும் இருந்து வந்தது. அதுவும் கூட மிகப்பழையது. 25 ஆண்டுகளுக்கு முந்தையது. பழைய சோவித் …

Read More »

தென் கொரியாவில் அமெரிக்கா கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்கா தென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. வட கொரியாவின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதலை நடத்த போவதாக அறிவித்துள்ளார். அவருடைய மிரட்டல் காரணமாக …

Read More »

வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா: ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுகிறது

வங்காளதேசத்தில் 560 மசூதிகளை கட்டும் சவுதி அரேபியா இதற்காக ரூ.6 ஆயிரம் கோடி செலவிடுவதாக வங்க தேச திட்ட மந்திரி முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார். வங்காள தேச அதிபர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சவுதி அரேபிய மன்னரை சந்தித்த அவர், வங்காள தேசத்தில் பல்வேறு இடங்களில் மசூதி கட்டுவதற்கு சவுதி அரேபியா உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஏற்றுக் …

Read More »

பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்தால் மக்களின் மனநிலை உக்கிரமடையும்: சி.வி.

பொறுப்புக்கூறலை தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் ஒரு சிறந்த உதாரணமாகும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரது உறவுகளின் வடக்கு- கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வெளியிடும் வகையில் வட. மாகாண சபையில் முதலமைச்சர் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த …

Read More »

இந்தியாவிலிருந்து 46 அகதிகள் தாயகம் திரும்பினர்

இந்தியாவின் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 46 பேர் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக வசதிப்படுத்தலுடன், குறித்த அகதிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா ஆகிய …

Read More »