Friday , April 19 2024
Home / செய்திகள் (page 437)

செய்திகள்

News

குச்சவெளியில் சட்டவிரோத காட்டு மரக்குற்றி வியாபாரம் பொலிஸாரால் முற்றுகை!

குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்குளம் – பேராறு வனப்பகுதியினுள் நீண்டநாட்களாக சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த காட்டு மரக்குற்றி வியாபாரம் பொலிசாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வனப்பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் வெட்டி குற்றிகளாக்கப்பட்ட நிலையில் 32 முதிரைமரக்குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மேலும் நால்வர் தப்பிச்சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் 10 தொடக்கம் 15 வட்ட அடிப்பரப்பினையுடைய 8 முத்திரை மரங்கள் …

Read More »

ஒரு வாரத்திற்குள் வித்தியா கொலை வழக்கின் குற்றப் பத்திரிகை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்றப் பத்திரிகை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அரசதரப்பு வழக்கறிஞர் நாகரத்தினம் நிஷாந்த் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கக்கோரி மேற்படி வழக்கு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒன்பது சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை …

Read More »

மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சபையில் பொது எதிரணி போர்க்கொடி!

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினர். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, 23/2 இன்கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் …

Read More »

கீதா குமாரசிங்க விவகாரம்: தீர்ப்பு கைக்கு கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை! – சபாநாயகர் தெரிவிப்பு

“கீதா குமாரசிங்க எம்.பி. தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சம்பந்தமாக எனக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் என்பன நிறைவடைந்ததை அடுத்து, வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரம் ஆரம்பமானது. …

Read More »

அமைச்சர்கள் சிலருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை! – அது குறித்தும் நடவடிக்கை தேவை என்கிறது ஜே.வி.பி.

தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கும், ராஜபக்ஷவினருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றது. எனவே, இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தில் கீதா குமாரசிங்கவுக்கு ஒருவிதத்திலும், மற்றையவர்களுக்கு ஏனைய விதத்திலும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் …

Read More »

தலதா மாளிகைக்கும் செல்கின்றார் மோடி!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி கொழும்பு வரவுள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையை 12ஆம் திகதி மோடி திறந்துவைக்கவுள்ளார். மலையக பயணத்தின்போதே அவர் தலதா மாளிக்கைக்கும் செல்லவுள்ளார். …

Read More »

வடக்கு சுற்றுலா நியதிச்சட்டத்திற்கு நாடாளுமன்றத்திடம் அனுமதி!

வடக்கு மாகாணத்திற்குரிய சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டை வடக்கு மாகாண சபை கோரியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 46(அ)3(அ) பிரிவின் கீழ்தான் இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்திற்கு விடுப்பதாக குறிப்பிட்ட சபாநாயகர், இந்த அறிவித்தல் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். அத்தோடு, நியதிச்சட்ட வரைபின் பிரதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் …

Read More »

முள்ளிக்குளம் மக்களின் காணி விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் நேரில் சென்று ஆராய்வு

மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இன்று (வியாழக்கிழமை) முள்ளிக்குளம் கிராம மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது காணிகள் அடையாளம் காணப்படாதவர்களுக்கு அடையாளம் கண்டு வழங்கப்பட உள்ள நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முள்ளிக்குளம் மக்கள் அனைவரையும் தங்களிடம் முள்ளிக்குளம் காணி தொடர்பாக உள்ள சகல விதமான ஆவணங்களின் பிரதிகளுடன் முள்ளிக்குளம் ஆலயத்திற்கு …

Read More »

ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் – எப்.பி.ஐ தலைவர்

அதிபர் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எப்.பி.ஐ அமைப்பும் ஒரு காரணம் என ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்த நிலையில், ஹிலாரி மீதான குற்றச்சாட்டை மறைத்து வைத்திருந்தால் அது பேரழிவாக இருக்கும் என எப்.பி.ஐ தலைவர் பதிலளித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டனர். முன்னர் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது ஹிலாரி தனது தனிப்பட்ட வேலைக்காக அரசு இ-மெயிலை …

Read More »

பிரிட்டன் இளவரசர் பிலிப் அரச பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் வயது முதிர்வின் காரணமாக அரச பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரிட்டன் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத்தின் கணவரான 95 வயது இளவரசர் பிலிப், ஏடின்பெர்க் பிரபுவாக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக அவர் தன்னுடைய அரச பொறுப்பில் இருந்து இந்த கோடைக்காலத்துடன் விலக முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …

Read More »