Wednesday , April 17 2024
Home / செய்திகள் (page 420)

செய்திகள்

News

இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! – வல்வெட்டித்துறையில் கூறினார் அமைச்சர் மங்கள

“எமக்கிடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” – இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஆழிக்குமரன் குமார் ஆனந்தனின் நினைவாக, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில், 75 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் …

Read More »

வேற்றுமை உணர்வை இல்லாதொழிக்க வேண்டும்! – விக்கி வலியுறுத்து

தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர்

“எம்மிடையே வேற்றுமை இல்லை. மாறாக சிந்தனைத் தெளிவு உண்டு. இந்த நாட்டின் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமை உணர்வுகளும் சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையாகும்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “இதனை இல்லாதொழிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுக்க வேண்டும். தவறான சிந்தனைகள் மாறினால் நாட்டின் அரசியல் …

Read More »

மஹிந்த தரப்பின் பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்! – ஆஸியில் வைத்து இலங்கையர்களிடம் மைத்திரி கோரிக்கை

“அதிகாரத்தில் இருந்த சிலர் (மஹிந்த தரப்பினர்), மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்தப் பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருகின்றேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களை கென்பரா நகரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் …

Read More »

இனியும் பொறுத்திருக்க முடியாது! தமிழர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வேண்டும்!! – சம்பந்தன் வலியுறுத்து

“தமிழர்கள் பொறுமை காக்கும் வரையில் பொறுமை காத்துவிட்டார்கள். இனியும் அவர்களால் பொறுத்திருக்க முடியாது. தமிழ் மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்படவேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளத்துக்கான சுவிஸின் தூதுவர் ஹரால்ட் சன்பேர்க், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் …

Read More »

நல்லாட்சியில் வடக்கு, கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! – மேலும் 3 ஆயிரம் ஏக்கரை விடுவிக்க நடவடிக்கை என்கிறது அரசு

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 5ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது எனவும், மேலும் 3ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து காணி அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் அளித்தார். பின்னர், …

Read More »

போருக்கு பின்னர் முகாம்களில் தஞ்சமடைந்த தமிழ் மக்களின் தங்கத்துக்கு என்ன நடந்தது? – தகவல் எதுவும் இல்லை என்கிறது அரசு

கேப்பாபுலவு காணிகளுக்கு

போரின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுதந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துகள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் தம்மிடம் எந்தவொரு தகவலும் இல்லை என்று அரசு தெரிவித்தது. நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது. இந்நிலையில், நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் நேற்று நான்காவது தடவையாகவும் இது தொடர்பில் கேட்கப்பட்டிருந்தது. இதற்கான …

Read More »

பதவிக்காக அலையும் அமைச்சர் நானல்லன்! – எந்தவொரு பதவியையும் இதுவரை கேட்டு வாங்கியதில்லை என்கிறார் கயந்த

அதிகாரத்தை கைப்பற்றுவதே – அமைச்சர் கயந்த

ஊடகத்துறை அமைச்சு மற்றும் கலை,கலாசார அமைச்சின்கீழ்வரும் சில திணைக்களங்களைத் தனது அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்தார் என வெளியாகியுள்ள தகவல்களை காணி, நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக நிராகரித்தார். “பதவிக்காக அழையும் நபர் நான் அல்லன். இதுவரை எந்தப் பதவியையும் கேட்டுவாங்கியதில்லை” என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் …

Read More »

பொருளாதாரப் பின்னடைவுக்கான முழுக்குற்றத்தையும் ரவியின் மீது சுமத்த முடியாது என்கிறது மஹிந்த அணி!

நீதிபதி நியமிப்பு-ஜீ.எல். பீரிஸ்

இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்கான முழுக் குற்றத்தையும் முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தமுடியாதென மஹிந்த அணியான பொது எதிரணியின் பேச்சாளரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பொறுப்புகளை சரிவர நிர்வகிக்கவில்லை என்பது தெரிந்த விடயமே என்றபோதிலும் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு அவரே அடிப்படைக் காரணம் என்று கூறமுடியாது. அரசின் பலவீனமான பொருளாதாரக் …

Read More »

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் ராணுவ நிதி உதவி குறைக்கப்படும்: பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் ராணுவ நிதி உதவி குறைக்கப்படும் என பாகிஸ்தானுக்கு டிரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் மிரட்டல் நடைபெறும் நிலையில் அமெரிக்காவில் ராணுவ சேவைகள் கமிட்டியின் செனட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் ராணுவ உளவுத்துறை இயக்குனர் லெப்டினெட் ஜெனரல் வின்சென்ட் ஸ்டீவர்ட் பேசினார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில், வைத்துள்ளது. எனவே, அதன் …

Read More »

மான்செஸ்டர் தாக்குதலில் 7 பேர் கைது: தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் திங்கட்கிழமை இரவு அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த அரங்கில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் …

Read More »