Wednesday , April 17 2024
Home / செய்திகள் (page 418)

செய்திகள்

News

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பேரெழுச்சியுடன் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் நேற்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும், இதுவரையில் அரசிடமிருந்து அவர்களுக்கு உருப்படியான பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அரசின் பராமுகத்தை – புறக்கணிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் காணாமல் …

Read More »

விநாயகமூர்த்திக்கு யாழில் பெருமளவிலானோர் அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இறுதிக்கிரியைகள் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், கல்விச் சமூகத்தினர், நீதித்துறையினர், அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். விநாயகமூர்த்தியின் உடலம் நேற்றுக் காலை சாவகச்சேரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது. சுனவீனமடைந்திருந்த விநாயகமூர்த்தி கொழும்பில் உள்ள தனியார் …

Read More »

விநாயகமூர்த்தி மறைவு: மீட்பரை இழந்து தவிக்கின்றோம்! – தமிழ் அரசியல் கைதிகள் கவலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான  அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயாவின் இறப்புச் செய்தி அறிந்த நாம் ஆறாத்துயர் கொண்டு விழி கசிகின்றோம். தமிழ் அரசியல் கைதிகள் ஆகிய எமது பார்வையில் …

Read More »

அமைச்சரவை இணைப்பேச்சாளராக சு.கவின் சார்பில் தயாசிறி நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்கவுள்ளார். அவரின் பங்குபற்றலை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக இருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்தப் பதவியில் தொடர்ந்தும் …

Read More »

அமைச்சுகளுக்கு இவ்வருடம் வாகன இறக்குமதி இல்லை! – பாதிப்பு விவரங்களைக் கோருகிறார் ஜனாதிபதி

“அமைச்சுகள் உட்பட சகல அரச நிறுவனங்களுக்குமான வாகன இறக்குமதியை இவ்வருடத்தில் முழுமையாக நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது”  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அழிவடைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான திட்டத்தை விரைவாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூட்டத்தின்போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். “மண்சரிவு, வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த …

Read More »

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை விரும்புகின்றனர் தெற்கு கடும்போக்குவாதிகள்! – ஜே.வி.பி. கூறுகின்றது

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புகின்றனர் என்றும், தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாதுவிட்டால் அந்தக் கடும்போக்குவாதிகளின் முயற்சியே இறுதியில் வென்றுவிடும் என்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “போர் முடிந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை இந்த நாட்டுப் பிரஜைகளாக …

Read More »

வடக்கை இப்போது ஆழ்வோர் புலிகளே! – இது நாட்டுக்குப் பேராபத்து என்கிறது மஹிந்த அணி

“வடக்கு மாகாணத்தை இப்போது விடுதலைப்புலிகளே ஆட்சி செய்கின்றனர். அங்கு கடும்போக்குவாதிகள் தலைதூக்கிவிட்டனர். அதேபோன்று தெற்கில் பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தெற்கை அவர்களே ஆள்கின்றனர். மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்த பின்னரே இந்த அபாயகரமான – பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மஹிந்த ஆட்சியில் அழிக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் தற்போதைய தேசிய அரசில் மீண்டும் வந்துள்ளன என்றும் மஹிந்த அணி …

Read More »

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் வெள்ளி வரை பூட்டு! இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அரசால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,  கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இந்த விசேட அறிவித்தலை கல்வி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது எனவும் அவர் …

Read More »

மூன்று மாணவிகள் துஷ்பிரயோகம்! – மூதூரில் பதற்றம்

மூதூர் – பெரியவெளி, மல்லிகைத்தீவில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அங்கு பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் மாலைநேர (பிரத்தியேக) வகுப்புக்குச் சென்ற மூன்று மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களுள் சிலர் இம்மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்கள் உடனே  தலைமறைவாகினர். அவர்களுக்கு …

Read More »

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் விநாயகமூர்த்தி! – இரங்கல் செய்தியில் சுமந்திரன் தெரிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. இவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது பாடுபட்டவர் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அப்பாத்துரை விநாயகமூர்த்தி நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மிகச் சிறப்பாகச் …

Read More »