Friday , April 26 2024
Home / செய்திகள் (page 410)

செய்திகள்

News

லண்டனில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: மசூதி அருகே வேன் மோதி ஒருவர் பலி

லண்டன் நகரில் மசூதிகளில் தொழுகை முடிந்து திரும்பி வந்தவர்கள் மீது வேனை ஏற்றி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோடு உள்ளது. புனித ரமலான் மாதம் என்பதால் இங்குள்ள மசூதிகளில் நேற்று நள்ளிரவு வேளையில் ’தராவீஹ்’ தொழுகை நடந்தது. தொழுகை முடிந்து ஏராளமானவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேன் தொழுகை முடிந்து வீடு திரும்பி …

Read More »

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. மேலும் இங்கு இஸ்லாமியர்கள் இடுகாடு மற்றும் நினைவு கற்கள். …

Read More »

கொழும்பில் தீவிர தேடுதல்: ஞானசார தேரர் சிக்கவில்லை!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 650 இற்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோதும், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளைத் தேடி நவீன தொழிநுட்ப வசதிகளைக் கொண்டு சுமார் நான்கு மணிநேரம் மேற்படி தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகத்தீவிரமாகத் தேடப்பட்டுவரும் நபர்களின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மேற்படி …

Read More »

வடக்கு மாகாண அவைத் தலைவருக்கு சோழர் கால அரசர்களைப் போன்ற சிம்மாசனம்

வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருக்காக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் நாள் நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில், புதிய சிம்மாசனத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அமர்ந்திருந்தார். இதுகுறித்து கொசுறுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, சோழர் கால அரசர்கள் பயன்படுத்தியதைப் போன்ற ஆசனத்தை மாகாணசபையின் உயர் அதிகாரி ஒருவர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Read More »

ஆலோசனை கூறலாம்; உத்தரவாதம் தர முடியாது – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் பதில்

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பது தொடர்பாக, நடத்தப்படும் கலந்துரையாடலின் ஒரு கட்டமாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத …

Read More »

நல்லிணக்கத்தினை குழப்பினால் நடவடிக்கை: மலிக் சமரவிக்ரம

இனவாத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், “ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியத்தை வலுவூட்டி மதம் சாராத ஒரு கட்சியாக செயற்பட்டு வருகின்றது. உண்மையான இலங்கையின் அடையாளத்தைக் கட்டியெழுப்ப கட்சி அர்ப்பணிப்புடன் …

Read More »

கீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி , பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையில் இந்த நீதவான் குழு குறித்து மனுவை விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர். குறித்த மேன்முறையீட்டு மனுவின் பிரதிவாதிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த ஐவரடங்கிய நீதவான் குழு பிரதம …

Read More »

சிரியா வான்வெளித் தாக்குதல்: 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக ரஷ்யா தகவல்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் எஸ்ஸார் மீது சிரியா ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் சுமார் 180 ஐ.எஸ் தீவிரவாதகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் …

Read More »

ஜப்பான்: அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதியதில் மாயமான கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதிய விபத்தில் மாயமான கடற்படை வீரர்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற நாசகாரி போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 …

Read More »

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் அதிபர் இமானுவேல் மெக்ரான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஓராண்டுக்குள் ஆட்சியை பிடித்தார். அதிபர் தேர்தல் முடிந்ததையொட்டி …

Read More »