Wednesday , January 16 2019
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

News

தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே சுமந்திரன் மேற்கொண்டுவருகின்றார். இவரின் நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்டுவந்த பிரசாரங்களையும் விட ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு …

Read More »

மைத்திரிக்கு மனநல கோளாறு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் இந்த இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த …

Read More »

ரணில் தலைமையில் கடுமையான தீர்மானம்

சிறிலங்கா அரசாங்கம் சார்ந்த விளம்பரங்கள் தொடர்பில் இறுக்கமான ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதற்கான யோசனையொன்றுக்கு நேற்றைய தினம் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு அரச விளம்பரங்களை வழங்குவதை குறைக்க திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இதனை ஒரு யோசனையாக இன்று நடைபெறவுள்ள வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. …

Read More »

துப்பாக்கிச் சூடு – கொலைகளை கட்டுப்படுத்த நாமலின் அறிவுரை

நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிக் கலாசாரத்தை அடக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த மூன்றரை வருடங்களில் ஏறத்தாழ தினசரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் இடம்பெற்று வருவது குறித்து தகவல்கள் செய்திகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில், மஹிந்த அரசில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த பாதாள உலக கும்பலும் தற்போது தலைவிரித்தாடுவதாக கூறப்படுகிறது. எனினும், பாதாள உலகத்தினரை தூண்டி விடுவது மஹிந்த அணியென ஐக்கிய …

Read More »

2019 ஆம் ஆண்டில் அடங்கினார் மைத்திரி

2019 ஆம் ஆண்டிற்கான முதல் அமைச்சரவை முன்மொழிவுகள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பமானது. அதன் படி அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் இன்று ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மேலும் அவற்றில் பெரும்பாலான திட்டங்களை நிதி அமைச்சகத்துடன் தொடர்புபடுத்தியதாக இருந்தது என்றும் …

Read More »

புதிய ஆண்டின் புதிய அமைச்சரவையில் மனந்திறந்த மைத்திரி!

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. இனிமேல் ஈடுபடபோவதுமில்லை. என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறுகிய உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். அமைச்சுகளுக்கான நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் சில அமைச்சர்கள் அதிருப்தி …

Read More »

கூட்டமைப்பின் திட்டத்தை தோற்கடிக்க போடப்படும் பாரிய திட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோற்கடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் இதுவரையில் எந்த வரைவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அது தொடர்பான எந்த கலந்துரையாடல்களிலும் தாங்கள் பங்கேற்கவில்லை. எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல்விடும் எந்த திட்டமும் நாடாளுமன்றத்தில் தடுக்கப்படும். …

Read More »

இராணுவத்துக்கு எதிராக பொங்கி எழுந்த முல்லைத்தீவில் மக்கள்

கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அந்த பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று காலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவமே கேப்பாபுலவு மண்ணிலிருந்து உடனடியாக வெளியேறு என்ற பிரதான பதாகையைச் சுமந்தவாறு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக எமது களநிலைச் செய்தியாளர் கூறுகின்றார். ஆர்ப்பாடத்தில் இடுபட்டுள்ள மக்களை …

Read More »

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் பெறுவதை அனுமதிக்கக் கூடாது

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருக்கிறார். வடமத்திய மாகாணத்தில் நொச்சியாகம பகுதியில் நேற்று பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்ச, அரசாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவு மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக்கூடும்.போரின் முரமாக அடையமுடியாததை அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் …

Read More »

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எடுத்த அதிரடி முடிவு!

ஐக்கிய தேசிய கட்சியின் எட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.அத்துடன் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போதும் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு செயற்படவுள்ளதாகவும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது. கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த ஒரு வருடத்தில் சகல மக்களுக்கும் சமமான சலுகைகள் கிடைக்கப்பெறவேண்டும்.கடந்த மூன்றரை வருடங்களிலும் நாட்டின் சகல பகுதிகளுக்கும் முழுமையான சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு மக்களின் ஆட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்காகவே சுயாதீனமாக இயங்குவதற்கான தீர்மானத்தை …

Read More »
error: Content is protected!