Sunday , March 25 2018
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

News

சசிகலாவுக்கு பரோல்

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நடராஜனின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். இதனையடுத்து இன்னும் சில …

Read More »

நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சசிகலாவின் கணவரும் பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான நடராஜன் இன்று அதிகாலை உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருமாவளவன்: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: …

Read More »

நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பிரபல பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகரும் சசிகலா கணவருமான நடராஜன் இன்று காலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனார். இந்த வகையில் சற்றுமுன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், பொன்முடி , எ.வ.வேலு உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் உடனிருந்தனர். நடராஜன் மறைவு குறித்து ஸ்டாலின் கூறியபோது, ‘நடராஜனின் மறைவு …

Read More »

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழ். விஜயம்

யாழ். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார். யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார். பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3 கோடி ரூபா நிதி செலவில் இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த …

Read More »

சொத்துக்காக பெற்ற தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகன்

புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை அவரது மகனே வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ராணி(54). இவரது மகன் ஆனந்த்(30). சொத்து தொடர்பாக ராணிக்கும், ஆனந்துக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இன்று காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தாய் என்றும் பாராமல் ராணியின் தலையை துண்டித்து காவல் …

Read More »

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ராஜ்நாத் சிங் எங்கே?

இந்திய ராணுவம் இல்லாத பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இந்தியவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இருவருக்கு மோசமாக காயம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் அருகே இருக்கும் பூன்ச் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் 5 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். காஷ்மீர் தொடர்பான பிரச்சைனை இந்தியா …

Read More »

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் – தமிழிசை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். மத்திய …

Read More »

நடராஜன் கவலைக்கிடம்

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இவருக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கணவரை காண பரோல் வேண்டி மனு ஒன்றை பிறப்பித்துள்ளார். கணவரின் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் …

Read More »

மக்கள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்? போன்சேகா

மக்கள் கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட தயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வரலாற்றில் சவால்களை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் மக்கள் வழங்கும் எந்த சவாலாக இருந்தாலும் அதனை புறந்தள்ளாது ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார். பொது வேட்பாளர் எண்ணக்கரு ஊடாக எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் இது தனது தனிப்பட்ட கருத்து. அன்று நான் வெற்றி பெற்றிருந்தால், சகல …

Read More »

சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்படுபவர்பளின் முறைப்பாடுகளை விசாரணைசெய்ய பொறிமுறை

காணாமல்போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நபர்கள் அடங்கலாக பொதுவான சட்டமுறையற்ற கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய சம்பவங்களை சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சு அவ்வப்போது அறிந்து கொண்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு தனது சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை எப்பொழுதும் உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாருக்கு …

Read More »
error: Content is protected!