Wednesday , April 17 2024
Home / செய்திகள் (page 362)

செய்திகள்

News

டிடிவி தினகரன் அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள்

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் விரைவில் புதிய அரசு அமையும் என்று, அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கூட்டியிருக்கிறது. கடந்த 18 ஆம் தேதி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த திவாகரன், 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார். தற்போது, கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி …

Read More »

கூடுதலாக ராக்கெட்கள், வெடிகுண்டுகள் தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு

சமாதான பேச்சுவார்த்தையின் பக்கம் அமெரிக்கா நெருங்கிவரும் நிலையில் கூடுதலாக ராக்கெட்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டிவரும் வடகொரியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். எனினும், பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என …

Read More »

ஆப்கானிஸ்தான்: தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டு தெற்கு பகுதியில் இன்று தலிபான் இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர் அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கின. நீண்ட காலமாக நடந்து வரும் இந்த போரில் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு அரசு …

Read More »

ஹாங்காங் நகரை சூறையாடிய ஹாட்டோ புயல் – தெற்கு சீனா வெள்ளக் காடானது

ஹாங்காங் நகரை இன்று சுழற்றியடித்த ஹாட்டோ புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ராட்சத அலைகளின் எழுச்சியால் தெற்கு சீனா வெள்ளக்காடானது. ஆசியாவின் பொருளாதார மையம் என அழைக்கப்படும் ஹாங்காங் நகரை இன்று பத்தாம் எச்சரிக்கை எண் கொண்ட ஹாட்டோ புயல் தாக்கியது. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த பெரும்புயலால் கடல் அலைகள் சீற்றத்துடன் நகர வீதிகளுக்குள் பாய்ந்து மோதின. புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் …

Read More »

கூட்டு எதிர்க்கட்சி பொது வேட்பாளரை நிறுத்தாது

கூட்டு எதிர்க்கட்சி எப்போது பொது வேட்பாளரை நிறுத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விஜேதாச ராஜபக்சவை பொது வேட்பாளராக நிறுத்த கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சி விஜேதாச ராஜபக்சவுக்கு சார்பாக …

Read More »

மைத்திரியின் உத்தரவை ஏற்றுக்கொண்ட விஜயதாச! கட்சியில் தொடர்வதாக அறிவிப்பு

அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி தன்னை நீக்கியதை ஏற்றுக்கொள்வதாக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஜேதாச ராஜபக்சவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கான கடிதத்தை அவருக்கு அனுப்பியிருந்தார். விஜேதாச ராஜபக்சவை அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய …

Read More »

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பம்! அமைச்சர் விஜயதாசவை பதவியிலிருந்து தூக்கிய மைத்திரி

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவரது பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்கத் தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு …

Read More »

சுமந்திரன் மீதான கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்குடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது …

Read More »

செப் முதலாம் திகதி தொடக்கம் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலித்தீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பன தடைசெய்யப்படவுள்ளது. இதேவேளை, இதற்கெதிராக கைது செய்யும் சட்டநடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இத்துறையை சார்ந்தவர்களின் நலன் கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வற்காக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2017.07.11 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க 2017 …

Read More »

வடக்கு மாகாண சபையில் புதிய அமைச்சரவை! – ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் 

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்துடன் பொறுப்பேற்றது. ஏற்கனவே அமைச்சராக இருக்கும்  கந்தையா சர்வேஸ்வரனுக்கு மேலதிகமாக முதல்வர் விக்னேஸ்வரனும், அமைச்சர் அனந்தி சசிதரனும் புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றனர். அதனால் அவர்கள் இருவரும், அத்துடன் புதிதாக அமைச்சர் பதவிகளை ஏற்ற ரெலோவின் ஞானசீலன் குணசீலன், புளொட்டின் கந்தையா சிவநேசன் ஆகியோரும் இன்று  தத்தமது பொறுப்புகளை ஏற்று …

Read More »