Friday , April 19 2024
Home / செய்திகள் (page 320)

செய்திகள்

News

வெளிநாட்டில் 4 சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்!

அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுமிகளை, இலங்கையர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா கான்பரா நகரில் வசிக்கும் சுனில் பட்டகொட என்ற 62 வயதுடைய நபரே, 14 மற்றும் 15 வயதுடைய நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். தற்போது குறித்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கான்பரா நகரில் வசிக்கும் 62 வயதுடைய சுனில் பட்டகொட என்ற …

Read More »

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பல லட்சம் பணம் மோசடி! யாழில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் பருத்தித்துறையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , மருதங்கேணியைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 6 இலட்சம் ரூபாவை வாங்கியுள்ளார். எனினும் பணம் கொடுக்கப்பட்டு …

Read More »

வெற்று பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளுங்கள் பாஜக அரசுக்கு ராகுல் எச்சரிக்கை

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: காஸ் விலை உயர்ந்து விட்டது. ரேஷன் பொருள் விலை உயர்ந்து விட்டது. உங்களின் பொய் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள். விலைவாசியை கட்டுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அளியுங்கள். அல்லது இடத்தை காலி செய்யுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் குஜாராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது விட்டது. வேலையின்மை, குறித்து பாஜக அரசு மீது தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆஸ்பத்திரியில் அட்மிட்டான குஷ்பூ..! ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் தீவிரம்…!!

ரஜினி, கமல், பிரபு என அப்போதைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பு. தற்போது படத்தயாரிப்பு, அரசியல் என ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வரும் அவர் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றில் இருக்கும் சிறு கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது. இது முடிந்து அவர் 2 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் அவர் …

Read More »

பயங்கரவாதத்தை விட பாதாள உலகக்கும்பல் ஆபத்தானது : மஹிந்த

மகிந்த

பயங்கரவாதத்தை விட ஆபத்தான பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் நல்லாட்சியில் அதிகரித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ​தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பயங்கரவாத குழுக்களை விட பாதாள உலகக்கும்பல்கள் ஆபத்தானவை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வலியுறுத்தியுள்ளார்.  

Read More »

வித்தியா படுகொலை: மேலும் சிலர் கைது?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் …

Read More »

யாரும் வரலாம் எவரும் போகலாம்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம். இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப் போகிறோம் என்று கேட்டால் அத­னையும் சாத­க­மாகப் பரி­சீ­லித்து உள்­வாங்­குவோம் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில் …

Read More »

கேட்டலோனியா தலைவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக, கார்லஸ் அரசை ஸ்பெயின் அரசு பதவியில் இருந்து அகற்றியது. கேட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட கார்லஸ், தனது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பலருடன் பெல்ஜியத்தில் உள்ளார். அதே நேரத்தில் அங்கு தான் அரசியல் புகலிடம் கேட்க செல்லவில்லை என்று கூறினார். …

Read More »

சென்னையில் மீண்டும் விட்டு விட்டு தொடரும் மழை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று …

Read More »

மீனவர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி

நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும், முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் மீன் பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தன் கீழ், முழுமையாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை பூரணப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நோனாகம – கலாசார நிலையத்தில் இதற்கான நிதியுதவி …

Read More »