Wednesday , March 27 2024
Home / செய்திகள் (page 302)

செய்திகள்

News

வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது

நேபாள பாராளுமன்றத்துக்கு 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, அவர்கள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேபாள நாட்டின் கானிகோலா என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த ஒரு கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் …

Read More »

சீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் பலி : 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 52 பேர் காயமடைந்துள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் தற்போதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, பாதுகாப்பான …

Read More »

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் – ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தொழில் திணைக்களத்தின் 191 புதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். ”இயற்கை அனர்த்தத்தினால் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் சொத்துக்களையும் இழந்துள்ளனர். அவர்களின் துன்பத்துடன் நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்கான நலன்புரி விடயங்களில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். தேசிய அனர்த்தம் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் முப்படையினர், …

Read More »

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

புசல்லாவை, ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி. பிரிவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக மின்சார விநியோக கம்பி அறுந்து விழ்ந்ததில் சிக்குண்டே களு எனப்படும் எஸ். அருணசாந்த என்ற 28 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். மலையகத்தில் தொடர்ந்து நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. மரணம் …

Read More »

தொப்பி இல்லை என்றால் வேறு எந்த சின்னம்?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ, வேறு சுயேட்சை வேட்பாளர் தொப்பி சின்னத்தை கேட்காவிட்டால் தினகரனுக்கு அந்த சின்னத்தை வழங்குவதில் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டது. ஆனால் அது நடப்பது சாத்தியம் இல்லை இந்த நிலையில் ஒருவேளை தொப்பி சின்னம் தனக்கு கிடைக்காவிட்டால் கிரிக்கெட் மட்டை அல்லது விசில் …

Read More »

சிங்கப்பூரில் ஜமாய்க்கும் விஜய்காந்த !!

தேமுதிக தலைவர் விஜய்காந்த சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படைங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கடந்த 28 ஆம் தேதி சென்றதாக தகவல் …

Read More »

அம்ருதா ஜெ.வின் மகளா? – தீபா பரபரப்பு பேட்டி

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு …

Read More »

இரணைமடு குடிநீர் விநியோகம் தொடர்பில் மாற்றுவழி

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பல வருடங்களாக யாழ் மக்கள் குடிநீர் பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கான நீர் விநியோக முயற்சி தடைப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு திட்டங்களினூடாக இந்த மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படுமா என வினவினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது. இரணைமடு நீர் தேக்கத்தின் கொள்வனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு அரசியல் ரீதியான …

Read More »

தொழில் திணைக்களத்திற்கு 191 புதிய நியமனங்கள்

தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். எண்பத்தைந்து இலட்சம் அளவிலான …

Read More »

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழியில் தகவல் வழங்குவதில் நெருக்கடியாம்

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழி தெரிந்த அதி­கா­ரி­களின் பற்­றாக்­குறை கார­ணத்­தினால் தங்­களால் வானிலை முன்­ன­றி­வித்­தல்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் குறித்து முன்­னெச்­ச­ரிக்­கை­களை தமிழ் மொழியில் விடுக்க முடி­யா­துள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பிரே­மலால் தெரி­வித்­துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையில் கடும் காற்று மற்றும் கன­மழை பெய்­து­வ­ரு­கின்ற நிலையில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மைகள் குறித்து முன்­ன­றி­வித்­தல்கள் சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி­களில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள போதும் இவ் …

Read More »