Monday , September 24 2018
Home / செய்திகள் (page 302)

செய்திகள்

News

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது; டி.எம்.சுவாமிநாதன்

அரசியல் கைதிகளை விடுப்பதற்கு அரசாங்கத்தில் சட்ட ரீதியான முறையொன்று உள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே செயற்பட முடியும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகள் தங்கள் விடுவிப்பு தொடர்பில் மனுக்களை அளித்துள்ளதாகவும் இதுகுறித்து சட்ட ரீதியாக ஆராய்ந்த பின்னரே அவர்களை விடுவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி சபையினால் அமைக்கப்பட்ட கற்பகசோலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிலையம், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு …

Read More »

ஆவா குழு உறுப்பினர்கள் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலலேயே இந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த ஐந்து பேரும் ஆவா குழுவுடன் ஏற்கனவே தொடர்புகளை வைத்திருந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக …

Read More »

சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும்

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா – இல்லையா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வழிகாட்டல் குழுவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பொருள் மற்றும் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. அது ஒரு புதிய அரசியலமைப்பா அல்லது …

Read More »

மீண்டும் மீண்டும் யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது : மட்டு. மேற்கு வலய கல்விப்பணிப்பாளர்

மீண்டும் மீண்டும் பத்து வருடத்துக்கு முந்திய யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. கடந்த காலங்களில் நடந்தவைகளால் பாதாளத்துக்குப் போய்விட்டோம். இனி எழும்ப வேண்டிய காலம். ஒரு பந்தை அடித்தால் அது மேலே எழும்ப வேண்டும் அது போலத்தான் சமூகமும். அவ்வாறில்லாவிட்டால் அச்சமூகம் அழிந்து போகக்கூடிய சமூகமாக இருக்கும் என மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கனகசூரியம் அகிலா தெரிவித்தார். மண்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலளப்பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் …

Read More »

சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்

மைத்திரி அரசாங்கத்துடன் இணைந்து சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறுவதற்கு காரணம், தான் மக்களுடைய பக்கம் நிற்பதாக காட்டி கொள்வதற்கே என்றும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே …

Read More »

யாழ். மருதங்கேணி கடல்நீர் ஊடாக நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும்

யாழ். மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ். மாவட்டத்தின் நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இரணைமடு நீர் வராது எனக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என சம காலத்தில் கேள்விகள் எழுந்துவரும் நிலையில், இது தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனைக் …

Read More »

மக்கள் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்; கேப்பாபுலவு மக்கள்

தாங்கள் தெரிவு செய்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளும் தம்மை ஏமாற்றி விட்டதாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இன்றையதினம் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தனர். கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி வன்னி மாட்ட நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்திருந்த கேப்பாபுலவு மக்கள் தமது …

Read More »

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை; விஷேட பிரதிநிதிகள் குழு ஸ்ரீலங்கா விஜயம்

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளது. நாட்டில் நிலவும் அரசியல்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட நிலைமைகளை அவதானிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதிநிதிகள் சிலர் குழுக்கள் ஸ்ரீலங்காவுக்கு சென்று கண்காணிப்புகளை மேற்கொண்டனர். அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட …

Read More »

உண்மை கண்டறியும் ஆணைக்குழு விரைவில் அமைக்கப்படும்; ஹர்ஷ டி சில்வா

ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் என்று ஸ்ரீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் ஒரு இலகுவான செயற்பாடு அல்ல எனக் குறிப்பிட்ட அவர், இனவாதிகள் மற்றும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுபவர்களின் தடைகளைத் தாண்டி, இதனை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு வேகமாக நல்லிணக்கத்தை அடைய முடியுமோ அந்தளவுக்கு வேகமாக தாம் நகர்ந்து …

Read More »

தமிழரைத் தொடர்ந்து ஏமாற்றினால் மஹிந்த போன்றே வீடு செல்வீர்கள்! – மைத்திரி – ரணில் அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

“நல்லாட்சி என்று கூறும் மைத்திரி – ரணில் அரசு தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கித்தான் ஆட்சிக்கு வந்தது. அதேவேளை, ஆட்சிக்கு வந்த பின்னர் ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த அரசு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இந்த அரசு ஏமாற்றினால் மஹிந்த அரசைப் போன்று இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்ப நேரிடும்.” – இவ்வாறு வவுனியாவில் வைத்து மைத்திரி – ரணில் …

Read More »
error: Content is protected!