Thursday , April 25 2024
Home / செய்திகள் (page 301)

செய்திகள்

News

ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட நினைவுத்தூபி ,அமைத்திருந்த இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற …

Read More »

143 நாள் வீதியில் இருந்தும் தலைவிதி மாறவில்லை – வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.12.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள் 20,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனம் எங்கே?, எதிர்கட்சி தலைவரே ஏன் மௌனம், நியமன இழுத்தடிப்பு எதற்காக?, அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?, 143 நாள் வீதியில் இருந்தோம் தலைவிதி மாறவில்லை, பேச்சுவார்த்தை போதும் நியமனம் வழங்கு, …

Read More »

மட்டக்களப்பில் மீனவர்களின் வலைகளில் பாம்புகள்

மட்டக்களப்பு – நாவலடியில் இன்று காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் சிக்கியிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் …

Read More »

எதிர்வரும் ஐந்தாம் ஆறாம் திகதி வானிலை அறிவிப்பு

தற்போது தெற்கு அந்தமான் தீவிற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் அதிகரித்து மத்திய வங்காள விரிகுடா ஊடாக இந்தியாவிற்குள் நுழைவதை காணமுடியும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இது இலங்கையின் கிழக்கு திசையில் நாட்டுக்கு அருகில் பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் இதன் பயணப்பாதை மாற்றமடையலாம் என்பதுடன், இதன் புதிய நிலை …

Read More »

மைத்திரி – மஹிந்த இணைய வேண்டும்- தி.மு.ஜயரட்ன

மைத்திரி மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அந்த கட்சி பிளவுபடும் நிலையில் இருந்த போதும் தற்போது வரை உடையாமல் பயணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Read More »

வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் வீடுகள்

வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கான கேள்விப்பத்திர திறப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த வீட்டுத் திட்டத்துக்காக சுமார் 40 நிறுவனங்கள் கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளன. இந்த கேள்விப் பத்திரங்கள் கடந்த மாதம் திறக்கப்பட முடிவுசெய்திருந்தபோதும், அந்தப் பணிகள் பிற்போடப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த கேள்விப்பத்திரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளதாக தேசிய …

Read More »

இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு

தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள பேரூந்து ஒன்றில் ‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச நடனத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தென்பகுதியில் இருந்து வந்த பேரூந்தின் பின்னாலேயே மேற்படி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் தற்போது இனவாதம் களையப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மன்னார் வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தினுள் காட்டு யானைகளின் அட்டகாசம்- பாதீப்பை எதிர்கொள்ளும் கிராம மக்கள்-(VIDEO)

மன்னார்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுவுக்குற்பட்ட   வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தினுள் நேற்று வியாழக்கிழமை(30) இரவு காட்டு யானைகள் குறித்த கிராமத்தினுள் உற் புகுந்து விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை சேதப்படுத்தியுள்ளதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த கிராமத்தினுள் தொடர்ச்சியாக காட்டு யானைகள் உற் புகுந்து விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை சேதப்படுத்தி வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை(30) இரவு குறித்த கிராமத்தினுள் உற் புகுந்த காட்டு யானைகள் …

Read More »

மன்னாரில் காணாமல் போன குடும்பஸ்தர் மடு காட்டு பகுதியில் சடலமாக மீட்பு

 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று(01) வெள்ளிக்கிழமை மாலை மடு   காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.   -சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.   ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை …

Read More »

வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது

நேபாள பாராளுமன்றத்துக்கு 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, அவர்கள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேபாள நாட்டின் கானிகோலா என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த ஒரு கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் …

Read More »