Friday , June 22 2018
Home / செய்திகள் (page 30)

செய்திகள்

News

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 27 பேர் காரைக்கால் வந்தனர்

புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், என மொத்தம் 27 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை எல்லையில் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி 27 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், 27 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலைச் செய்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் …

Read More »

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை

கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்தவர் சிட்னி லிமோஸ். இவரது மனைவி வாலனி. இவர்களுடன்  ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து துபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். தங்களது நிதி நிறுவனத்தில் அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை முதலீடு செய்து வந்தால் 120 சதவீதம் லாபம் தருகிறோம் எனக்கூறி பலரை சேர்த்தனர். அவர்களது கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் அந்த நிறுவனத்தில் பல …

Read More »

முல்லை தீவு மர்மம்: இலங்கை விரைந்த அமெரிக்க குழு!

வழக்கத்துக்கு மாறாக முல்லை தீவு கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறதாம். முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்கா குழு இலங்கை விரைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பல முறை முல்லை தீவு கடல் தன்மையில் மாற்றம் காணப்பட்டுள்ளது. நீர் மட்டம் திடீரென் ஐந்து அடி அதிகரித்ததாகவும், கடல் கொந்தளித்ததாகவும், கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும் அங்கு இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சுனாமி …

Read More »

ரயில் மீது ஏறி போராட்டம் : அதிர்ச்சி வீடியோ

பாமக சார்பாக இன்று திண்டிவனம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் அதிமுக, பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் போராட்ட களமாக மாறியுள்ளது. சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அண்ணாசாலையில் …

Read More »

சென்னை ஐபிஎல் போட்டிகள் மாற்றம்

நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடப்பதற்க்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சென்னையே சில மணி நேரங்கள் பதட்டத்தில் இருந்தது. இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போட்டி அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த போட்டி வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு நாளை டிக்கெட்டுக்கள் விற்பனையாகும் …

Read More »

சிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி ரஜினி, கமலுக்கு இல்லையே

சிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி சமீபத்தில் அரசியலில் குதித்துள்ள ரஜினி, கமலுக்கு இல்லையே என்பதை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கன்னட நடிகர் அனந்தநாக் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். புதியதாக அரசியலுக்கு வந்துள்ள கமல், ரஜினியிடம் காவிரி பிரச்சனையில் வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களும் பழைய பாணியில், ஏற்கனவே உள்ள அரசியல் தலைவர்கள் போல் அரசியல் செய்கின்றனர். கர்நாடகத்தில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது இன்னும் ஒரு மாதத்தில் புதிய அரசு …

Read More »

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: மைதானத்திற்கு பூட்டுப்போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்றுமாலை சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் பலத்த பாதுக்காப்புடன் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்கள் தங்குமிடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அந்த …

Read More »

நெல்லை, தூத்துக்குடியில் மழை – வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை பெய்தது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Read More »

நெல்லையில் மழை – பாபநாசம், அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் கடுமையான வெப்பம் நிலவியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பாபநாசம், அடவிநயினார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று நள்ளிரவில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, குண்டாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அம்பை, ஆய்க்குடி, …

Read More »
error: Content is protected!