Wednesday , November 21 2018
Home / செய்திகள் (page 3)

செய்திகள்

News

கஜா புயல்: தமிழக அரசை பாரட்டிய கமல்!

கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

Read More »

வவுனியாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்

வவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அவ்விடத்திற்கு வருகை தந்த சிலர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு வாய் தர்க்கத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பினருக்கும் இடையில் மோதல் …

Read More »

பாராளுமன்றத்தில் அரங்கேறும் கொலை வெறித்தாக்குல்! உச்சத்தில் மகிந்த அணியினர்

பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் தமதமாகின. பாலித தேவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கைதுசெய்யவேண்டும் எனக்கோரி ஆளுந்தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த அக்கிராசனத்தைச்சுற்றி ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் செங்கோலுடன் சபாநாயகர் …

Read More »

பாராளுமன்ற வரலாற்றில் இன்று கரி நாள்!

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்றைய நாளே கரிநாள் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் இடம்பெற்ற மோதல்கள் குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்கட்சி உறுப்பினர்கள்,சபாநாயகர் பொலிஸார் மீது இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதலிற்கு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களே காரணம் என ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர்கள் சபாநாயகரின் ஆசனத்தை பலவந்தமாக ஆக்கிரமித்தனர் என தெரிவித்துள்ள ஹக்கீம் சபாநாயகரின் …

Read More »

கட்சி ஆரம்பிக்காதீர்கள்: ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பணியை தொடங்கி, அந்த பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். இருப்பினும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே ஒருசில அரசியல்வாதிகளும், அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். …

Read More »

கரையை நெருங்கும் கஜா புயல்…

இரவு 8 மணிமுதல் இரவு 11 மணிக்குள் கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாநில அவசரக்கட்டுப்பாடு மையத்திற்கு சென்னை வானிலை மையம் இந்த புயல் குறித்து முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்திருந்தது. கடலூர் – பாம்பன் இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு விடுத்துள்ளது. சென்னைக்கு அருகே 290 கிமீ ..,நாளைக்கு அருகே 290 …

Read More »

ஜனாதிபதி இலட்சியங்களில் இருந்து விலகிவிட்டார்! ரணில்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிவிட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தாம் இன்னும் அந்த இலட்சியங்களுடனேயே செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் …

Read More »

மைத்திரிக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்

பாராளுமன்றத்தில் எந்தநேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருகின்றோம். ஆனால் மஹிந்த மைத்திரி அணியினர் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். எமது மக்கள் பலத்தை காட்ட பாராளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெற்றியை உறுதிப்படுத்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்திவருகின்றது. இதில் …

Read More »

கன்னத்தில் கை வைத்து கலவரத்தை வேடிக்கை பார்த்த ரணில்

பாராளுமன்ற அமர்வில் இன்று ஏற்பட்ட கைகலப்பு களேபரங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி பக்கத்தின் நான்காம் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்து கன்னத்தில் கை வைதுகொண்டு சிரித்தவாறு சம்பவங்களை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்துள்ளார். அத்துடன் அவ்வப்போது ரவி, சஜித்,சாகல எம்.பிக்கள் அவரிடம் காதில் ஏதேதோ கூறிக்கொண்டு அங்கும் இங்குமாய் ஓடித் திருந்தனர். இந்நிலையில் சபாபீடதுக்கு முன்பாக கைகலப்பு தொடங்கியவுடன் எதிர்க்கட்சி பக்கத்தில் முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு …

Read More »

இன்னோசன்ஸ் இல்ல இக்னோரன்ஸ் –ரஜினியை விளாசிய நடிகை கஸ்தூரி

நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் எழுவர் விடுதலைக் குறித்து அவரின் கருத்து என்னவென்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி எந்த எழுவர் எனக் கேள்வியெழுப்பினார். அவரது இந்த பதில் தமிழக அரசியல் சூழ்நிலையில் பலத்த சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ரஜினியின் இந்த பொறுப்பற்ற பதிலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்து முதல்வர் ஆகும் கனவில் இருக்கும் ரஜினிகாந்துக்கு 27 வருடங்களாக தமிழகம் …

Read More »
error: Content is protected!