Thursday , June 21 2018
Home / செய்திகள் (page 3)

செய்திகள்

News

தன்னை கேலி செய்தவர்களிடம் மஹிந்த் விடுத்துள்ள சவால்

வரி அறவீடுகளை 20 வீதமாக குறைத்து காண்பிக்குமாறு தற்போது சவால் விடும் நபர்கள் அன்று போரை முடிவுக்கு கொண்டு வந்து காட்டுமாறு தனக்கு சவால் விடுத்தார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது எனக்கு சவால் விடுவோர் நான் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நினைக்கவில்லை. நான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே அவர்கள் எந்த அச்சமும் சந்தேகமும் இன்றி வடக்கு, கிழக்கிற்கு செல்கின்றனர். …

Read More »

சிங்கப்பூரை இரவில் சுற்றிவந்தார் வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் இன்றிரவு சிங்கப்பூரை சுற்றி பார்த்து பலரிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நாளை காலை அமெரிக்க ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்கு முன்னதாக இரவில் கிம் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்துள்ளார். இன்று மாலை ஆறு மணியளவில் கிம் தங்கியுள்ள சென் ரெஜிஸ் ஹோட்டலிற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர். அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் கிம் மரினா பே சான்ட்ஸ் என்ற ஆடம்பரஹோட்டலிற்குள் …

Read More »

ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனால் பலர் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார். முன் வெளியிட்ட அம்மா அணி என்ற கட்சியின் பெயரை மாற்றி, தற்பொழுது அண்ணா திராவிடர் கழகம் …

Read More »

பின்னுக்கு தள்ளப்பட்ட புதியதலைமுறை: பழிவாங்கும் நடவடிக்கையா?

பிரபல தமிழ் செய்தி சேனல் புதியதலைமுறை சமீபத்தில் வட்டமேஜை விவாதம் என்ற நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. இந்த விவாத நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், இதனால் விவாதத்தில் பிரச்சனை உருவாகியதாகவும் தகவல்கள் வந்தது. இதனையடுத்து அமீர் மீதும் புதிய தலைமுறை மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஊடகம் மீதான வழக்குப்பதிவுக்கு வழக்கம்போல் அரசியல் கட்சி தலைவர்கள் இதுவொரு பழிவாங்கும் நடவடிக்கை என அறிக்கை விட்டனர். புதியதலைமுறை …

Read More »

டிடிவி தினகரனின் மாஸ்டர் தான் ஸ்டாலின்

டிடிவி தினகரனும் திமுகவும் மறைமுகமாக இணைந்து செயல்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாக அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை அவ்வப்போது தினகரனும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் டிடிவி தினகரனின் மாஸ்டரே திமுக செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை சபரிமலையின் 18 படிகள் என்று கூறியுள்ளார் தினகரன். இவரென்ன …

Read More »

நடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி! சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு…

நடிகரும், ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் தமிழ்ச்சமூகத்தின் எதிரி ; விரோதி என ரஜினியை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், தூத்துக்குடி மக்களை …

Read More »

நாடு முழுவதும் சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 11 மணிநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 3666 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்த வகையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 3666 பேரில் 998 பேர் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் 648 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் எனவும் ஏனையோர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More »

இலங்கை இராணுவம் தொடர்பில் சீ.வி வெளியிட்ட தகவல்

இலங்கை இராணுவத்தை 9 பிரிவுகளாக பிரித்து நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் நிலை நிறுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த யோசனையை அமுல்படுத்துவதன் மூலம் 9 மாகாணங்களுக்கு இராணுவப் பிரிவுகள் கிடைக்கும். வடக்கில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை தமிழ் மக்கள் ஏற்க …

Read More »

எஸ்.வி.சேகரை பாஜகவிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளோம்

பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் முன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்ச …

Read More »

நீட் தேர்வினால் மட்டும்தான் தற்கொலையா ?

நீட் தேர்வினால் தமிழகத்திலும் வட இந்தியாவிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தியாள்ரகள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த தற்கொலைகள் நீட் தேர்வினால்தான் ஏற்பட்டதா? என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தவர்களா? வட இந்தியர்களா? என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. ஒரு பரிட்சை எழுதுகிறோம். எதிர்பாராத வகையில் …

Read More »
error: Content is protected!