Friday , April 19 2024
Home / செய்திகள் (page 219)

செய்திகள்

News

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது. கடந்த 19ஆம் நாள்இ யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடந்த விழாவில் சிறிலங்கா அதிபர் பங்கேற்றிருந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட …

Read More »

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இதில் 80இற்கும் அதிகமான ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார …

Read More »

ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி – கனடா வலியுறுத்தல்

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன்இ தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது. கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை கனடா வரவேற்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை …

Read More »

சிறிலங்கா அதிபரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார். இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரைஇ பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன் வரவேற்றார். அத்துடன் சிறிலங்கா அதிபருக்கு செங்கம்பள மரியாதையும் அளிக்கப்பட்டது. இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறும்இ பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் பிரதம விருந்திரமாக கலந்து கொள்ளவுள்ளார்.

Read More »

இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது – தினகரனிடம் கூறிய சசிகலா?

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். இன்னும் சில சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை சசிகலாவின் தம்பி திவாகரன் கவனித்துக்கொள்கிறார். மற்றபடி ஆறுதல் கூற வரும் உறவினர்களை சசிகலாவே நேரில் சந்தித்து பேசுகிறாராம். சமீபத்தில்தான் தினகரன் தனது …

Read More »

எல்லாம் ஏமாற்று வேலை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் போராடுவது ஏமாற்று வேலை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கடந்த சில நாட்களாகவே பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவுரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் “அதிமுக எம்.பி.க்கள் செய்வது ஏமாற்று வேலை. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு …

Read More »

அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள் : ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகர் என்ற அரசியல் கைதி, 2008ஆம் ஆண்டு தொடக்கம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்திருந்தது. இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி, ஆனந்தசுதாகரின் மனைவி யோகாராணி நோயினால் மரணமானார். இதனால், அவர்களின் இரு குழந்தைகளும் தாயையும் …

Read More »

பிரித்தானிய பிரபுவின் தகவல்கள் பொய்யானவை

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரபு நசெபி தெரிவித்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையென ஐ.நா.வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் பக்க அமர்வாக நடைபெற்ற அமர்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் வெறும் 8000 பேரே உயிரிழந்தனர் என பிரபு நசெபி கடந்த சில மாதங்களுக்கு முன்னர்; தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள்காட்டி, அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் சிங்கள பிரதிநிதியொருவர் நேற்று கேள்வி …

Read More »

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கவலை

இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தொடர்ந்தும் இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகள், சிறுபான்மையினருக்கெதிரான வன்முறைகள் , மத ரீதியான அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக எங்களது பரிந்துரைகளை ஏற்று, மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களை …

Read More »

தினகரன் பாஜகவை எதிர்க்கவில்லை – போட்டு உடைத்த நாஞ்சில் சம்பத்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பாஜகவை எதிர்த்து பேசி நான் பார்ததே இல்லை என அவரிடமிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் தலைமையாக சசிகலாவை ஏற்க மாட்டேன் என பரபரப்பு கிளப்பிய நாஞ்சில் சம்பத், அடுத்த சில நாட்களிலேயே சசிகலாவுடன் இணைந்து கொண்டார். சசிகலா சிறைக்கு சென்ற பின் தினகரனின் தீவிர ஆதரவாளராக சம்பத் மாறினார். அந்நிலையில், சமீபத்தில் தினகரன் தனது அணிக்கு …

Read More »