Wednesday , November 21 2018
Home / செய்திகள் (page 10)

செய்திகள்

News

பிரதமரான மகிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ள முதலாவது கைது உத்தரவு!!

பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், தொடர்புடையவர் எந்தப் பதவியில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெற்றோலிய வளங்கள் அமைச்சராகப் பணியாற்றிய அர்ஜூன ரணதுங்க இன்று மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தெமட்டகொட பெற்றோலியக் …

Read More »

மைத்திரி மீது ரணில் கடுமையான சீற்றம்

நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அனுமதிக்காதமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறு தெரிவித்தமை பாரதூரமான குற்றம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அனைத்தையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறேன் என்றும் அவர் கூறினார். புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் தீர்மானம் குறித்தும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே …

Read More »

ரஜினிக்கு வயசாயிடுச்சி.. அவரால முடியாது : ராஜேந்திர பாலாஜி

செல்லும் இடமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ராஜேந்திர பாலாஜி விமர்சித்து வருகிறார். 3 அமாவாசைகளுக்குள் கமல்ஹாசன் கட்சி காணாமல் போய் விடும் என்றார். அதன்பின், ஒரு தேர்தல் நடந்து முடிந்தால் கமல்ஹாசன் கட்சியே இருக்காது எனக்கூறினார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஸ்டாலின்தான் அடுத்த …

Read More »

ரூ.1 லட்சம் சம்பளத்தை வைத்துகொண்டு நாக்கையா வழிப்பது? கருணாஸ்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பின்வருமாறு பேசினார். என் தொகுதி மக்களுக்காகவும் எந்த ஒரு சலுகையும் செய்திடாத அரசில் எம்.எல்.ஏ.வாக பதவியை தொடர நான் விரும்பவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக ஆனது அனைத்து பிரிவிலும் கமிஷன் பெற்று அரசுக்கு கொடுப்பதற்காக அல்ல. ஊதியத்துக்காக நான் எம்.எல்.ஏ.வாகவில்லை. இதுவரை சபாநாயகரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என் சமுதாயத்திற்காக எப்போது …

Read More »

மஹிந்தவை பிரதமராக்கி ஐ.நா.வை கேலிக்கூத்தாக்கினார் மைத்திரி!

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை கேலிக்கொன்றாக மாற்றியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்தே ஐக்கிய நாடுகள் ஆதரவு வழங்கி வந்தது. ஆனால் நாம் அப்போதே கூறினோம் இலங்கை …

Read More »

மைத்திரியும் – மஹிந்தவும் முதன் முறையாக ஒன்றாக

ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர். தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர். திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் …

Read More »

கொழும்பு அரசியலில் திருப்பம்; மகிழ்ச்சியில் ரணில்

ஜனாதிபதி மைத்திரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஜக்கிய தேசிய கட்சியின் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில் சுதந்திர கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More »

எனக்கு பாதுகாப்பு வேண்டும்! விக்னேஸ்வரன் கோரிக்கை

தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பிலான கோரிக்கை கடிதம் ஒன்றை அவர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர், முன்னாள் முதலமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், தனது பாதுகாப்பு தொடர்பில் தான் கடிதம் அனுப்பியும் இதுவரை எவ்வித பதிலும் இல்லலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

நள்ளிரவில் ரணிலுக்கு இப்படியொரு பேரிடி!

இலங்கை அரசியலில் எதிர்பாரத விதமாக பல மாற்றங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பிரதமரை அலரிமாளிகையிலிருந்து வெளியேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் மைத்திரி. இந்நிலையில் சற்றுமுன் அவர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அந்த வகையில் ரணிலின் காவலர் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவை பணித்துள்ளார், அலரிமாளிகையில் நீர், …

Read More »

நான் மகான் அல்ல; பழனிச்சாமி புனிதருமல்ல : டிடிவி

கரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆ.கே.நகர் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ வுமான டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில், சி.பி.ஐ விசாரணை தேவை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டிய போது., மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, இன்று சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்று மனு …

Read More »
error: Content is protected!