Sunday , March 25 2018
Home / செய்திகள் (page 10)

செய்திகள்

News

நல்லிணக்கம் பாதிக்கப்படின் நாடு அழிவை எதிர்நோக்கும் ; மகாநாயக்க தேரர் எச்சரிக்கை

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுமாயின், நாடு பாரிய அழிவை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க நேற்று (புதன்கிழமை) தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையலான இந்த வன்முறைக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள …

Read More »

தொடர்ந்து கண்டி நிர்வாகப் பிரிவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : இராணுவப் பேச்சாளர்

கண்டி மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் நேற்றுமுதல் ஓரளவு சாதாரண நிலைக்குத் திருப்புள்ள போதிலும் தொடர்;ந்து ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் அவர் மேலும் தெரிவித்தாவது, கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக மேஜர் ஜெனரல் ருக்மன் …

Read More »

கண்டியில் கலவரம் தணிந்தது- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது!

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (காலை) 10 மணிக்கு தளர்த்தப்பட்டுஇ மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது இன்று மாலை 4 மணிவரை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்இ தற்போது நிலைமை சுமூகமடைந்துள்ளதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ கடந்த 12 மணிநேரங்களில் எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இடம்பெறவில்லை …

Read More »

புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசுக்கு காட்டிக்கொடுத்தனர்

யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது, முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும். இன்று நாம் வாழ்வதற்கு அவர்களின் அர்ப்பணிப்பே காரணம். அதற்காக அவர்களுக்கு நன்றி …

Read More »

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் இடர்களை கண்டு அஞ்சாமல் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு …

Read More »

காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் – கமல்ஹாசன் காட்டம்

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார். அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் …

Read More »

தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைத்த இரகசிய அறிக்கை

கண்டி தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தடுத்து நிறுத்த பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான இரகசிய அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதுடன், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்தெனிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் திகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மோதலை தடுக்க உத்தியோகபூர்வ …

Read More »

பரிஸ் உணவகத்தில் இலங்கையர் மீது கொடூர தாக்குதல்

பிரான்ஸ், பரிஸ் நகரிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் இலங்கையர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆயுதம் ஏந்தி வந்த குழுவினரால் குறித்த இலங்கையர் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் குறித்த நபரின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரெஞ்சு தலைநகர் பகுதியில் இந்த கொடூரமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் …

Read More »

வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்

கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு அரசின் அசமந்த செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதில் தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னின்று செயற்பட்டு இருக்கின்றார்கள். அதன்மூலம் அவர்கள் எதிர்பார்த்தது சக வாழ்வையும், சமாதானத்தையும் ஆகும். இன்று …

Read More »

இது சிங்கள பௌத்த நாடு முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் : ஞானசாரர்

இது சிங்கள பௌத்த நாடு என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்றால்போல் வாழவும் வேண்டும். அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் திரும்ப கொலை செய்வோம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பு இன்று நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிங்களம்,முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் சமாதானமாக இருக்க …

Read More »
error: Content is protected!