Sunday , March 25 2018
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 4)

இந்தியா செய்திகள்

Online India News in Tamil, Tamilnadu News, Chennai News, National News in Tamil, Tamil News, Latest Tamil News. பல்வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளையும், செய்‌திகளையும் படிக்க தேசியச் செய்‌திகள்

‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்

அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை …

Read More »

தாயைக் கொன்ற பேராசிரியர்!

உடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ …

Read More »

ஆண்டின் தொடக்கத்திலே தொடங்கிய பன்றிக்காய்ச்சல்

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் பன்றிக் காய்ச்சல் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சமீபகாலமாக H1N1 எனும் வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலால் 3500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து 2018 ஆண்டின் தொடக்கத்திலே, பன்றி காய்ச்சல் பரவி வருவதனால் பொதுமக்கள் நடுக்கத்தில் உள்ளனர். பொதுமக்கள் …

Read More »

3 மனைவிகள் மாதம் ரூ.30,000 வருமானம்

ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளியான சோட்டு பராக் என்பவர் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் சோட்டு பராக்கின் நிஜ வாழ்க்கை சுவாரசியமாக உள்ளது. 40 வயதாகும் சோட்டு பராக் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார். அதே நேரத்தில் வெஸ்டேஜ் என்ற முன்னணி சுகாதார பராமரிப்பு மற்றும் …

Read More »

விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு?

தேசத் தலைவர்களின் பெருமையை பறைசாற்றும் நோக்கில் நாடு முழுவதும் ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விமானப் போக்குவரத்து அமைச்சர், அசோக் கஜபதி ராஜு பேசுகையில் மாநில அரசுகள், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின், மத்திய அரசுக்கு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து …

Read More »

கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய மௌர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி …

Read More »

பெண்ணை கற்பழித்த காவல் அதிகாரி

சிறையில் இருக்கும் தனது உறவினரை பார்க்க சென்ற இளம்பெண்ணை, காவல் அதிகாரி ஒருவர் பலவந்தமாக கற்பழித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 28 வயதுள்ள ஒரு பெண் சிறையில் இருக்கும் தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார். சிறைச்சாலையில் காவல் அதிகாரி ஒருவர் அப்பெண்ணை, அவரது உறவினரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரை அழைத்துச் செல்லும் போது அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதைப்பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என அவரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து …

Read More »

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக ஆக்கவேண்டும்

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்து, அந்த நாட்டை நான்கு துண்டுகளாக ஆக்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் அரசு உளவு வேலை பார்த்ததாக இஸ்லாமாபாத் சிறையில் அடைத்துள்ளது. அவரை அவரது தாயும், மனைவியும் கிறித்துமஸ் தினத்தன்று சிறையில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அவர்களின் தாலி, வளையல்கள் மற்றும் பொட்டையும் சிறை …

Read More »

ஆம்புலன்ஸில் மது; பெல்லி டான்ஸ்; சர்ச்சையை ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி விழா

உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சந்திப்பு விழாவில் பெல்லி டான்ஸ் நடைபெற்றது மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸில் மது கொண்டு வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லாஜ்பாத் ராய் மருத்துவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதில், 1992ஆம் பேட்ஜ் படித்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஷ்ய பெல்லி டான்ஸ் நடைபெற்றுள்ளது. மேலும் மருத்துவமனை ஆம்பூலன்ஸ் …

Read More »

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி

கடந்த வாரம் பாகிஸ்தான் நடந்ததிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்பொழுது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் இறந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் உள்பட …

Read More »
error: Content is protected!