Friday , June 22 2018
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 2)

இந்தியா செய்திகள்

Online India News in Tamil, Tamilnadu News, Chennai News, National News in Tamil, Tamil News, Latest Tamil News. பல்வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளையும், செய்‌திகளையும் படிக்க தேசியச் செய்‌திகள்

தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு

3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் நிதின் சிதானந்த் (200 மீட்டர் ஓட்டம்), ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), கமல்ராஜ் (டிரிபிள் ஜம்ப்), சந்தோஷ் மணிகண்டன் (உயரம் தாண்டுதல்) ஆகியோரும், பெண்கள் பிரிவில் சுபா (200, 400 …

Read More »

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி …

Read More »

இடி மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம் – ஒடிசா அரசு அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டுமே மின்னல் தாக்கியதில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக புவனேஸ்வரில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலர் ஏ.பி.பதி கூறுகையில், ‘மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கக் கூடிய தொழில்நுட்பம் சில மாநிலங்களில் நல்ல பலனளித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் நமது மாநிலத்திற்கான பயன்பாடு மற்றும் பொருந்தும் தன்மை குறித்து ஆய்வு …

Read More »

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடி

மறைமுக வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மாதந்தோறும் அதன் வசூல் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி வசூல் ஆகியுள்ளது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு வரி வசூலானது இதுவே முதல்முறை ஆகும். கடந்த மார்ச் …

Read More »

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 55 மாதங்களில் இல்லாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது. ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான், பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.56 என்று உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு …

Read More »

மத்திய மந்திரி பியூஷ் கோயல் மீது ஊழல் குற்றச்சாட்டு – ராஜினாமா செய்ய ராகுல் காந்தி வற்புறுத்தல்

ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், முன்பு மத்திய மின்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, அவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மத்திய மின்துறை மந்திரியாக இருந்தபோது, பியூஷ் கோயல் தனது ‘பிளாஷ்நெட் இன்போ சொல்யூஷன்ஸ்’ நிறுவன பங்குகளை மின்துறையில் ஈடுபட்டுள்ள ‘பிரமல் குழுமத்துக்கு’ விற்றுள்ளார். பங்குகளின் முகமதிப்பை விட ஆயிரம் மடங்கு விலை வைத்து அவர் …

Read More »

42 பயணிகளுடன் பேருந்தை கடத்திய போலி போலீஸ்காரகள். மைசூரில் பரபரப்பு

பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஆம்னி பஸ் ஒன்றை 42 பயணிகளுடன் 7 பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் 10 பெண்கள் உள்பட 42 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்து மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 7 பேர் கொண்ட கும்பல் மறித்தது. தாங்கள் மத்திய குற்றப்பிரிவு …

Read More »

பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிய டாக்டர்

ஜார்கண்ட் மாநிலத்தில் டாக்டர் ஒருவர் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி கொன்றுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சத்ரா என்ற பகுதியில் வசித்து வருபவர் அனில் பான்டா. இவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த தனியார் மருத்துவமனையின் டாக்டர் அருண்குமார், பான்டாவின் மனைவியின் மேல்சிகிச்சைக்காக மற்றோரு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அவரும் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவரது மனைவிக்கு …

Read More »

பா.ஜ.,வுடன் கைகோர்த்த காங்.,: மிசோரம் மாநிலத்தில் திருப்பம்

எதிரும், புதிருமாக உள்ள, காங்., – பா.ஜ., கட்சிகள், மிசோரம் மாநிலத்தில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் அதிகாரத்தை கைப்பற்ற, ஒரே அணியில் கைகோர்த்துள்ளது, அக்கட்சிகளின் மேலிட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர், லால்தன்வாலா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மிசோரம் மாநிலத்தில், சக்மா மாவட்ட மக்களுக்காக, சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில், 1972ல் துவங்கப்பட்டது. இந்த கவுன்சிலுக்கான தேர்தல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடப்பது …

Read More »

ஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் – வங்கிகளின் ஷாக் திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது என்று வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகிறது. குறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம். பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது. விரைவில் இந்த இலவச சேவைகளை நிறுத்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் அளிக்கும் சேவைக்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு வரி வசூலிக்க மத்திய அரசு …

Read More »
error: Content is protected!