Thursday , November 23 2017
Home / செய்திகள் / இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

India News

இந்தியாவில், முதல் முறையாக போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவில் முதல் முறையாக சுகோய் போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. கூட்டுத் தயாரிப்பு இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்காக மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் பல்வேறு வித ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் ரஷியாவின் என்.பி.ஓ. மசினோஸ்ட்ரேயெனியா கழகத்துடன் இணைந்து பிரமோஸ் அதிவேக (சூப்பர்சோனிக்) என்னும் நவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணை சோதனை …

Read More »

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரம் மூண்டது. கலவரத்தில் 90 பேர் பலியானார்கள். இதுபற்றிய விசாரணையின்போது, காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்டோர் நிதி திரட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஒரு கும்பல் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக …

Read More »

வெற்று பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளுங்கள் பாஜக அரசுக்கு ராகுல் எச்சரிக்கை

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: காஸ் விலை உயர்ந்து விட்டது. ரேஷன் பொருள் விலை உயர்ந்து விட்டது. உங்களின் பொய் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள். விலைவாசியை கட்டுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அளியுங்கள். அல்லது இடத்தை காலி செய்யுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் குஜாராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது விட்டது. வேலையின்மை, குறித்து பாஜக அரசு மீது தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.

Read More »

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று பிரதமர் மோடி

புதுடெல்லியில் உலக உணவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது: உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தொழில் வர்த்தகம் செய்வது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது. உலக வங்கி தொழில் வர்த்தகத்துக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்ட …

Read More »

பயங்கரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயம்

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் லஸிபல் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து அவர்கள் வந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் சுட்டதால் வாகனத்தின் கதவில் இருந்த கண்ணாடிகள் தெறித்து 2 …

Read More »

சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது

பாஜகவைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்மு காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும், இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இதுவரை, இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் இந்த 7 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு …

Read More »

இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு

இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நவீனப்படுத்த முன்னுரிமை இந்திய ராணுவத்துக்கு தேவையான கணிசமான ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தை நவீனப்படுத்தப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ராணுவத்தின் போர்திறனை மேம்படுத்துவதற்கு இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார். …

Read More »

முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரத்தின் கருந்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் ஜம்மு காஷ்மீர் மக்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்பது நியாயமானது தான் எனவும், அது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என கூறியிருந்தார். அவரது கருத்திற்கு பதில் அளித்த ஸ்மிருதி இரானி கூறுகையில், சிதம்பரம் கூறிய கருத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. வல்லபாய் படேல் இந்தியா முழுவதும் ஒரு …

Read More »

“காஷ்மீருக்கு சுயாட்சி அளிக்க வேண்டும்” ப.சிதம்பரம் கோரிக்கை; பா.ஜனதா கண்டனம்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘காஷ்மீரில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது, தங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை. அவர்களுடன் நான் உரையாடியபோது, பெரும்பாலானோர் சுயாட்சியை விரும்புவதை உணர்ந்தேன். நானும் கூட அதையே விரும்புகிறேன்’ என்று கூறினார். இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் …

Read More »

காலம் கனியும் போது கட்டாயம் திருமணம் நடக்கும் ; ராகுல் காந்தி

தனக்கு எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்போது நடக்கும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 47 வயது ஆகும் நிலையில், அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் விதியின் மீது நம்பிக்கை …

Read More »
error: Content is protected!