Friday , March 29 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 20)

இந்தியா செய்திகள்

விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறை – ஏர்இந்தியா

விமானத்தில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏர்இந்தியா புதிய விதிமுறைகளை கொண்டு உள்ளது. விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறைகளை கொண்டு வந்து உள்ள ஏர்இந்தியா, இதுபோன்ற பயணிகளுக்கு அபராதம் விதிக்க மற்றும் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளது. விமானங்களில் பயணிகள் பயணிக்க தடைசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் விமான காலதாமதத்திற்கு பயணிகளுக்கு அபராதம் விதிக்க ஏர் இந்தியா முடிவு செய்து உள்ளது. …

Read More »

கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி

கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் பிகே குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றார். கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த அகமது மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 71.33 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முஸ்லீம் லீக் வேட்பாளரான …

Read More »

பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை – முலாயம்சிங் யாதவ்

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் வலுவாக இருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி, காங்கரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல மாநிலத்தின் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் சரிவை சந்தித்தது. ஆனாலும் சமாஜ்வாடி, பகுஜன் …

Read More »

6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை

ஓரே ஆண்டில் 6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வரும் தேஜ் பிரதாப் சிங், கடந்த ஆண்டில் 327 வேலை நாட்களில் 6,065 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இடையில், அம்மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்திய போதிலும் அசராமல் …

Read More »

கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் காவல்துறையிடம் புகார்

கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரோமியோ எதிர்பு படையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் டுவிட் செய்திருந்தார். அதில், “ரோமியோ ஒரே ஒரு …

Read More »

ஸ்ரீநகர்: பன்தாசவுக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துணை ராணுவப் படை வீரர்கள் ஆறு பேர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகருக்குட்பட்ட பன்தாசவுக் பகுதியில் இன்று துணை ராணுவப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் உள்ளிட்ட இரு பாராளுமன்ற தொகுதிகளில் வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையை சேர்ந்த சில வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஒரு …

Read More »

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி: 7 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா-கிஸ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலச்சரிவு குறித்து போலீஸ் உயரதிகாரி சந்தீப் வான்சீர் கூறுகையில் “டிராப்ஷலா என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்க முயன்றபோது …

Read More »

பெங்களூரில் தடை செய்யப்பட்ட ரூ.9 கோடி பணத்துடன் 14 பேர் கைது: பெங்களூர் போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் ரூ.9 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அவற்றை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களாக …

Read More »

ஜம்மு காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைப்பதற்கு மிளகாய்ப்பொடி குண்டுகள் தோல்வியடைந்தால் பெல்லட் குண்டுகளை ராணுவம் பயன்படுத்தலாம்

ஜம்மு காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைப்பதற்கு மிளகாய்ப்பொடி குண்டுகள் பயன் அளிக்கவில்லை என்றால் பெல்லட் துப்பாக்கிகளை ராணுவம் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடுவோரைக் கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் பெல்லட் ரக குண்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த பெல்லட் ரக துப்பாக்கியில் இருந்து ஒருமுறை சுடும்போது, அது நூற்றுக்கணக்கான குண்டுகளை ஒரே சமயத்தில் அதிவேகத்தில் வெளியிடும். இந்த குண்டுகள் தாக்கினால் உயிர்ச்சேதம் ஏற்படாது. …

Read More »

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதி குருதேவ்சிங் பாதல் காலமானார்

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான குருதேவ்சிங் பாதல் இன்று காலை காலமானார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிரோன்மணி அகாலிதள கட்சியில் முத்த தலைவராக இருந்த 85 வயதான குருதேவ்சிங் பாதல் இதய நோய் காரணமாக இன்று காலை லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். குருதேவ்சிங் பாதல் இதற்கு முன்னர் பாஞ்க்ரைன் மற்றும் ஜைடொ ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டசபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மறைந்த பாதலுக்கு இரண்டு …

Read More »