Friday , June 22 2018
Home / முக்கிய செய்திகள் (page 5)

முக்கிய செய்திகள்

Head News

முன்னாள் ஜனாதிபதியிடம் இரகசிய விசாரனை! மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரகசிய விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, விசாரணைகளுக்கான நாளை மஹிந்த தெரிவிக்க வேண்டும் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் வழங்கிய முக்கிய தகவல்களின் அடிப்படையிலேயே …

Read More »

​காலா படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது.  இந்த திரைப்படத்தின் கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்று கூறி, திரைப்படத்திற்கு தடை கோரி  ராஜசேகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.கே. கோயல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி …

Read More »

வடக்கு முத­ல­மைச்­சரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்

போருக்கு பின்­ன­ரான காலத்­தில் இளை­ஞர், இளம் பெண்கள் எதிர் நோக்­கும் பிரச்­சி­னை­கள் மற்­றும் தேவை­களை அறிந்து கொள்­ளும் நோக்­கில் தமிழ் மக்­கள் பேர­வை­யின் இளை­ஞர் மாநாடு விரை­வில் நடை­பெ­றும் என்று மாகாண முத­லைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இளை­ஞர் யுவ­தி­களை ஒன்­றி­ணைத்த இளை­ஞர் மாநாட்­டுக்­கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பொது நூலக கேட்­போர் கூடத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றி­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். தமிழ் மக்­கள் பேரவை அர­சி­யல் …

Read More »

கர்நாடக முதல்வருடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் குமாரசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் இன்று சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கர்நாடக முதல்வர் …

Read More »

எதிர்கால சந்ததிக்கு அச்சுறுத்தல்! மைத்திரிக்கு எச்சரிக்கை

நாட்டில் அதிகரிக்கும் சூழல் மாசடைவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதனை கருத்திற்கொண்டு அனைவரும் சூழலை பாதுகாக்க கைகோர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேகாலை நகரில் நேற்று இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”சூழல் கட்டமைப்பினைப் பாதுகாப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், அது எவ்வகையிலும் தவிர்க்கப்பட முடியாத …

Read More »

வடக்கு முதலமைச்சரின் யுக்தி!

கடந்த வாரம் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலியின் வெற்றிக்கான யுக்தியைப் பற்றி விளக்கியிருந்தார். மொஹமட் அலியிடமிருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது அந்த விளக்கத்துக்கான காரணம். அதனை அவர் வெளிப்படையாகவும் கூறியிருந்தார். தன்முகத்தில் அடிபடாமல் வைத்துக்கொண்டு எதிரியைக் களைப்படைய வைத்து தோற்கடிப்பது தான் மொஹமட் அலியின் யுக்தி என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். …

Read More »

மைத்திரி இருந்திருந்தால் பிரபாகரன் இலகுவாக வென்றிருப்பார்: மஹிந்த

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் பிரபாகரன் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத ஆட்சியே தற்போது நடைபெறுகின்றது. மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். இப்போது பிரதமரை …

Read More »

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் இல்லை: உச்சநீதிமன்றம்!

பெண் பத்திரிக்கையாளர்களை குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார் எஸ்.வி.சேகர். இதையடுத்து தமிழகம் முழுக்க எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததால், சில நாட்கள் தலைமறைவாகியிருந்தார் எஸ்.வி.சேகர். அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு …

Read More »

ராஜபக்‌ஷே மீது குற்றம்சாட்டிய மைத்திரி! வெடித்தது சர்ச்சை!

ஜனாதிபதியின் கூற்று தொடர்பில் ஆராய்வதற்கு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதன்போது அக்கூற்று குறித்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு கூட்டு எதிர்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அளகப் பெரும தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. எனவே அக்குழு அது சம்பந்தமாக ஆராய்ந்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால …

Read More »

இலங்கை ரூபாய் வரலாறு காணாத பாரிய வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் விற்பனை பெறுமதி இவ்வாறு பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளமை இதுவே முதல் தடவையாகும். கடந்த மே 17 ஆம் திகதி ரூபாவின் பெறுமதி 159.55 என்ற வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. அதேவேளை நேற்றைய தினம் ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதென, இலங்கை மத்திய வங்கி …

Read More »
error: Content is protected!