Thursday , January 17 2019
Home / முக்கிய செய்திகள் (page 326)

முக்கிய செய்திகள்

Head News

சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தீர்வு கிடைக்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அபிலாஷை‪யாகும் என கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) ஏறாவூரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ’சிறுபான்மை இனங்கனின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் …

Read More »

விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி : தயாசிறி

சாதாரண தமிழ் மக்கள் சமாதானமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து, ஒற்றையாட்சியின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல தயாராக இருக்கின்றனர் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்- சிங்கள நல்லுறவை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்களை …

Read More »

புதிய அரசமைப்பிற்கே முதலிடம் ; ஜனாதிபதி

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கலந்தாய்வுச் செயலணியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி நாடு முழுவதிலும் கலந்தாலோசனைகளை நடத்தி அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. கலப்பு விசாரணைப் பரிந்துரையை உள்ளடக்கிய …

Read More »

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை

தமது சொந்த காணியில் தங்களை மீள்குடியேற்றாத பட்சத்தில் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாப்பிலவு குடியிருப்பு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களது காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்காகமான முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள் நான்காவது நாளாகவும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் …

Read More »

அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் – தன் வசிய குரலால்… கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அறிஞர் அண்ணா

இன்று அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன் வசிய குரலால்… கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அண்ணன் அறிஞர் அண்ணா. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார் அண்ணா. சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் “தளபதி”. பெரியாரின் சீடராக வலம் வந்த …

Read More »

குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிராஜாவுரிமை

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் குமார் குணரட்னத்திற்கு ஸ்ரீலங்கா பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவருக்கான பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கேகாலை பொலிஸாரால் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டிருந்தார். சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வருகைதந்ததுடன், வீசா …

Read More »

வடமாகாண சபையின் கிளிநொச்சி கட்டிடம் ஊடக விபசாரிகளுக்கு பதிலடி

ஊடக விபசாரங்களை நடத்துகின்றவர்களுக்கு பாடம் புகட்டும் முகமாகவே வடமாகாண சபை, கல்வியை வளர்த்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார். வடமாகாண சபை பல கட்டிடங்களைக் கட்டுவதாகவும், கல்வியை வளர்த்துச் செல்வதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரு நவீன காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒருமாடி வகுப்பறை கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண சபையின் …

Read More »

போர்க்குற்ற வழக்கு விசாரணை : எச்சரிக்கிறார் சர்வதேச வழக்கறிஞர்

சிவில் யுத்தங்களின் போது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடத்தப்படுகின்ற குற்றவியல் வழக்கு விசாரணைகள் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய வகையில் நடத்தப்படவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் குற்றவியல் வழக்கு விசாரணைகள் மோசமான முறையில் நடத்தப்படுமானால் அல்லாதுவிடின், இந்த நடைமுறையானது நியாயமானதாக நோக்கப்படாவிடின் அதிலிருந்து பெறப்படுகின்ற செய்தியும் கற்றுக்கொள்ளக்கூடிய விடயமும் பாதகமானதாக அமையும் என சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி கேய்ட்லின் ரெய்கர் குறிப்பிட்டுள்ளார். அப்படியான கசப்பான அனுபவங்கள் …

Read More »

நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுவதில்லை ; அனந்தி குற்றச்சாட்டு

நெடுந்தீவு மக்களின் கடல்பயணத்தை இலகு படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட ”நெடுந்தாரகை” படகு வெள்ளோட்டம் விடப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவில்லையென வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் நெடுந்தாரகை படகு சேவை தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் 83 ஆவது அமர்வு நேற்று நடைபெற்ற போதே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நெடுந்தீவுக்கான பயணிகள் …

Read More »

கிளைமோரும் – சுமந்திரனும்

அண்மைய நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலிகளினால் கொலைத்திட்டம் தீட்டப்பட்டுவருவதாக கூறி இற்றைவரை முன்னாள் போராளிகள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களாக கிளைமோர் மற்றும் டெற்ரனேற்ரர்கள் வைத்திருந்தமை பெருந்தொகையிலான கேரளக் கஞ்சா வைத்திருந்தமை என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தக் கொலை முயற்சி காதை புலனாய்வுப்பிரிவு சொல்லதற்கு முன்பதாக 4 மாதங்களுக்கு முன்பதாகவே மாகாணசபை உறுப்பினர் சயந்தன் மேடைகளில் கூறிய விடயம் …

Read More »
error: Content is protected!