Sunday , March 25 2018
Home / முக்கிய செய்திகள் (page 3)

முக்கிய செய்திகள்

Head News

பிரதமருக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கரு ஜெயசூர்யவிடம் ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இந்த பிரேரணையில் 4 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இன்று இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

Read More »

பிரதமருக்கு எதிரான தீர்மானம் : சு.கவில் பொதுவான இணக்கப்பாடு இல்லை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். புpரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று அல்லது நாளை பொது …

Read More »

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 21.03.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். …

Read More »

மறைந்த கணவரை காண தஞ்சை வந்தடைந்தார் சசிகலா..

மறைந்த தனது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பரோல் கிடைத்த சசிகலா சிறையிலிருந்து புறப்பட்டு தற்போது தஞ்சைக்கு வந்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது. இதையடுத்து, மதியம் சிறையில் இருந்து …

Read More »

முறுக்கு மீசை கெட்டப்பில் கமல்ஹாசன்

கமல்ஹாசன் தேவர் மகன் பட பாணியில் முறுக்கு மீசை கெட்டப்புடன் வளம் வந்த புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து பிஸியாகச் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் திரைக்கு வெளிவரவுள்ளது. அதற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்- 2 படத்தில் நடிக்க போகிறார். இந்நிலையில், கமல் தற்போது முறுக்கு மீசை கெட்டப்புக்கு மாறியுள்ளார். இதனால் அவர் …

Read More »

அப்பாடா தலைவர் வாயை திறந்துவிட்டாரா! ரஜினி இப்போவது பேசினாரே

சில நாட்களுக்கு முன் இமயமலை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பிவிட்டார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அவரது போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இமயமலை பயணம் புத்துணர்வு அளிக்கிறது. இனி 16 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வது நடக்கும். புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டு மிராண்டத்தனமானது. ரதயாத்திரையின் போது மத கலவரத்திற்கு …

Read More »

இலங்கை குறித்த அறிக்கை ஐ.நா.-வில் நிறைவேற்றம்!

இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல், 17ஆம் திகதிவரை, ஜெனீவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், இலங்கை தொடர்பாக …

Read More »

கண்டி வன்முறையை கோழைத்தனமானது ரவிநாத் ஆரியசிங்க ஐ.நாவில் கண்டனம்

கண்டியில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையானது, ஜனநாயக மற்றும் பன்முக சமுதாயத்தில் இடமற்ற சிலரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான செயல் என ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 37ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள் உரிமைகளும், …

Read More »

தேசிய கொடி போர்த்தும் அளவுக்கு என்ன செய்தார் ஸ்ரீதேவி? ராஜ்தாக்கரே

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் துபாயில் எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணத்தால் திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அவருடைய இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர் மேலும் மகாராஷ்டிர அரசு, அவரது உடலுக்கு மூவர்ண தேசிய கொடியை போர்த்தி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவியது. …

Read More »

சசிகலாவுக்கு பரோல்

சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நடராஜனின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். இதனையடுத்து இன்னும் சில …

Read More »
error: Content is protected!