Saturday , January 19 2019
Home / முக்கிய செய்திகள் (page 292)

முக்கிய செய்திகள்

Head News

மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அமர்வும்

தமிழீழ தேசிய துக்க நாளாகிய மே 18ம் நாளன்று மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களான மே 19 முதல் மே 21 வரையான நாள்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்றின் ஏழாவது அமர்வு இதே நகரில் கூடவுள்ளது. உலகின் பல பாகங்களிலுமிருந்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனற் சபை உறுப்பினர்களும் …

Read More »

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துரைப்பேன்- சம்பந்தன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், “ இந்தியப் பிரதமருடன் நடக்கவுள்ள சந்திப்புத் …

Read More »

வெகுவிரைவில் அரசை வீட்டுக்கு அனுப்புவோம்! – மஹிந்த தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்கிறார் நாமல்

“மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி அமையும் நாள் விரைவில் வரும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் …

Read More »

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வருகை

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் கொழும்பு வரவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே கொழும்பு வரத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, இந்தியப்பிரதமரின் பாதுகாப்பு அணியில் உள்ள நான்கு எம்.ஐ-17 சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று புதுடெல்லியில் இருந்து கொழும்பு …

Read More »

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நேரம் கனிந்துவிட்டது! – மஹிந்த கூறுகின்றார்

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய காலம் கனிந்துவிட்டது. எனவே, சரியான நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார். அதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நாட்டில் தற்போது நடப்பவற்றைப் பார்க்கையில் ஆட்சியைக் கவிழ்க்கும் அந்தத் தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணரக்கூடியதாக இருக்கின்றது. அதிகாரம் …

Read More »

அரசமைப்பு தயாரிப்பு குறித்து இரண்டு வாரங்களில் மைத்திரி விசேட அறிவிப்பு!

அரசமைப்பு தயாரிப்புப் பணி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகலாம். இதன்போது அரசமைப்பு பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டையும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவர் விளக்குவார் என்று அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு அது தொடர்பில் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும் …

Read More »

தமிழர்களின் பிரச்சினையை மோடியின் கவனத்திற்கு கொண்டுவர தீர்மானம்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, அநேகமாக 12ஆம் திகதி கூட்டமைப்பை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக காணி …

Read More »

நவீன லேசர் வெசாக் அலங்காரப் பந்தல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது

உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வலங்காரப் பந்தல் நாளை மறுதினம் (புதன்கிழமை) மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும் இந்த வெசாக் அலங்கார பந்தல், கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்நவீன இவ்வெசாக் அலங்கார …

Read More »

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டம்! – மஹிந்த அணி தீர்மானம்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டம்! – மஹிந்த அணி தீர்மானம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க நாடு முழுவதிலும் பூரண ஹர்த்தால்போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகள் எடுப்பதற்கு இந்த வாரம் மஹிந்த அணியின் முக்கிய உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளனர் என்று தெரியவருகின்றது. …

Read More »

பொன்சேகாவுக்கான புதிய பதவி குறித்து ஆர்வப்படும் இராஜதந்திரிகள்!

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களின்போது, இராணுவத்தில் சிறப்புச் செயலணியை உருவாக்கி அதிகாரங்களை ஒப்படைக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து உள்நாட்டு அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையைத் ஏற்படுத்தியிருந்தது. இதன் …

Read More »
error: Content is protected!