Monday , November 19 2018
Home / முக்கிய செய்திகள் (page 292)

முக்கிய செய்திகள்

Head News

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை என்று தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க முடியாது. சசிகலா முதலமைச்சராவதை மக்கள் விரும்பவில்லை. சசிகலா முதலமைச்சரானால் …

Read More »

மக்களின் நேரடியான ஆதரவை பெறுவதற்கு தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் – தீபா பேட்டி

மக்களின் நேரடியான ஆதரவை பெறுவதற்கு தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று விளக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தேவை. நான் அரசியலுக்கு வந்ததே ஜெயலலிதா விட்டு சென்ற பணியை தொடரவே. …

Read More »

மக்களவையில் இன்று குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

மக்களவையில் இன்று குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல்நாளில் குடியரசு தலைவர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, இ.அகமது எம்.பி.க்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி.க்கள், பாராளுமன்றத்தில் தொடர்ந்து முழக்கமிட்டனர். குறிப்பாக மக்களவையில் கேள்வி …

Read More »

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், ஒரு குடும்பத்தால் மட்டும்தான் சுதந்திரம் கிடைத்ததா? காங். மீது மோடி பாய்ச்சல்

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், ஒரு குடும்பத்தால் மட்டும்தான் சுதந்திரம் கிடைத்ததா? என காங்கிரசை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. அன்று பாராளுமன்றத்தின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது காங்கிரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:- பாராளுமன்ற கூட்டத்தில் …

Read More »

பொறுப்புக்கூறல் விவகாரம்: ஐ.நா.விடம் கால அவகாசம் கோரும் இலங்கை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா.வில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நடைமுறைப்படுத்தாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்விடயம் குறித்து மேலும் ஒன்றரை வருட கால அவகாசத்தை கோருவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோரியுள்ளதாகவும், சிவில் அமைப்புகளும் அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …

Read More »

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் ; சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஸ்ரீலங்காவுக்கு வழங்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, ஐரோப்பிய நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஸ்ரீலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சித்திரவதையில் இருந்து விடுதலை, சமாதானம் மற்றும் நீதிக்கான ஸ்ரீலங்காவின் பரப்புரை அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன. ஐரோப்பிய ஆணைக்குழு தவறான முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரையை முன்வைத்துள்ளது …

Read More »

விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவில் மீண்டும் தலைதூக்குவது நிச்சயமே என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் நல்லாட்சி அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற …

Read More »

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளார்

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா தற்போது புது வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார். அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறினார். இந்த நிலையில் அவர் தலைநகர் வாஷிங்டன் அருகேயுள்ள கலோரமா …

Read More »

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு – ஸ்டாலின்

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து சசிகலாவை சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். விரைவில் அவர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் 4வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி …

Read More »

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு : அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில் சசிகலா தமிழக முதல்வர் ஆவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து …

Read More »
error: Content is protected!