Thursday , January 17 2019
Home / முக்கிய செய்திகள் (page 10)

முக்கிய செய்திகள்

Head News

கிளிநொச்சி விரையும் பிரதமர் ரணில்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கு செல்லவுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் மக்கள் பிரதமரை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.

Read More »

சுதந்திரக் கட்சியை எவராலும் வீழ்த்த முடியாது!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது காணப்படுகின்ற நெருக்கடிகளை மையப்படுத்தி எவராலும் கட்சியை பலவீனப்படுத்தவோ, வீழ்த்தவோ முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, கட்சியினர் அனைவரும் ஒன்றினைந்து நெருக்கடிகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசியல் ரீதியில் இன்று காணப்படுகின்ற அனைத்து நெருக்கடிகளையும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே வெற்றிக் கொள்ள …

Read More »

எந்நேரத்திலும் மஹிந்த மீண்டும் பிரதமராகலாம்??

தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆகையால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் பிரேரணையையொன்று எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் பயணிப்பதை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலரே …

Read More »

ரஜினி பேட்ட பட ரிலீஸ் தேதியில் கடும் குழப்பம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் பொங்கலுக்கு வருகிறது பேட்ட. ரசிகர்கள் ரஜினியை எப்படி பார்க்க நினைக்கிறார்களோ அப்படியே இப்படத்தின் லுக்கில், ஸ்டைலில் காட்டியுள்ளார் கார்த்திக். பாடல்களுக்கு எல்லாம் ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ், தீம் மியூசிக் பற்றி தான் அதிகம் பேசினர். இப்போது படம் வரும் பொங்கல் ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது. இந்த நேரத்தில் தியேட்டருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தேதி 10 என்று இருக்கிறது ஆனால் …

Read More »

பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதிக்கு நேர்ந்த கொடுமை- பரிதாப நிலை கண்டு ரசிகர்கள் வருத்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகப்படுத்திய தொலைக்காட்சி விஜய் டிவி. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வந்தது, ஆனால் அது ரசிகர்களிடம் முதல் சீசனிற்கு பெற்ற வரவேற்பை பெறவில்லை என்றே தான் கூற வேண்டும். ஓவியா, ஜுலி, காயத்ரி இவர்கள் மூவறும் அந்நிகழ்ச்சி பிரபலமடைய ஒரு முக்கிய காரணம். இதில் WildCard மூலம் முதல் சீசனில் நுழைந்தவர் காஜல் பசுபதி. எப்போதும் சமூக வலைதளங்களில் இருக்கும் அவர் …

Read More »

பேட்ட ட்ரைலர் தேதி இதோ, ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் இந்த பொங்கலுக்கு பேட்ட படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து அனைவரையும் கவர்ந்து விட்டது. பாடல்கள் எல்லாம் செம்ம ஹிட் அடிக்க, தற்போது பேட்ட ட்ரைலர் எப்போது என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தனர். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனமே வரும் 28ம் தேதி பேட்ட ட்ரைலர் வருவதாக அறிவித்துள்ளனர்.

Read More »

மகிந்த அணியினரால் சம்பந்தன் கட்சிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கபடவுள்ளது.மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இவ்வாறு எச்சரித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். “இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.ஆனால் அதனை …

Read More »

மைத்திரியுடன் கடும் மோதல்! கூட்டத்தில் நடந்த அடிதடி

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி முன்னிலையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் வரை சென்றுள்ளதுடன் தொகுதி அமைப்பாளர்கள் பியதாசவை தாக்க முயற்சித்துள்ளனர். உடனடியாக செயற்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், மோதலை சமரசப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் எருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஸ்ரீலங்கா …

Read More »

அரசியல் தீர்மானத்தை எடுக்க போகும் மகிந்த!

கட்சியினர் மற்றும் நாட்டுக்காக பாரதூரமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க உத்தேசித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தங்காலை தொகுதி பிரதிநிதிகளுடனான கூட்டம் அங்குகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரக்கட்சியினர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளமையானது, கட்சிக்கு பெரும் …

Read More »

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் நாமல்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று நேரில் சந்தித்தார். கிளிநொச்சி பாரதிபுரம், பன்னங்கண்டி, கல்லாறு, பாடசாலைகளிலும், தர்மபுரம் பொது நோக்கு மண்டபத்திலும் தங்கியுள்ள மக்களைச் சந்தித்தார். நாமலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் வருகை தந்தார்.

Read More »
error: Content is protected!