Sunday , March 25 2018
Home / முக்கிய செய்திகள் (page 10)

முக்கிய செய்திகள்

Head News

அர்த்தமுள்ள பொறுப்புக்கூறவில் எவ்வித முன்னேற்றமும் இல்லை ; ஹுசைன்

அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நகர்வுகளில் இலங்;கையில் எவ்வித முன்னேற்றங்களும்; ஏற்படாமையால் உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கைவிடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி விசேட உரையை நிகழ்த்தவுள்ள மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹ{சைன் நேற்று, வாய்மூல அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இனம், மதம் மற்றும் …

Read More »

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் ; கனடா வலியுறுத்து

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் வன்முறைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கனடா, இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இனங்களுக்கிடையிலான அமைதியின்மை காரணமாக இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்து கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃரீலண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். முஸ்லிம் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் இனங்களுக்கிடையிலான வன்முறை குறித்து கனடா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுகளின் மூலம் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட …

Read More »

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் இடர்களை கண்டு அஞ்சாமல் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு …

Read More »

காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் – கமல்ஹாசன் காட்டம்

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார். அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் …

Read More »

இன்றைய ராசிபலன் 08.03.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். ரிஷபம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் …

Read More »

தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைத்த இரகசிய அறிக்கை

கண்டி தெல்தெனிய மற்றும் திகன பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தடுத்து நிறுத்த பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான இரகசிய அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதுடன், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்தெனிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் திகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மோதலை தடுக்க உத்தியோகபூர்வ …

Read More »

பரிஸ் உணவகத்தில் இலங்கையர் மீது கொடூர தாக்குதல்

பிரான்ஸ், பரிஸ் நகரிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் இலங்கையர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆயுதம் ஏந்தி வந்த குழுவினரால் குறித்த இலங்கையர் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் குறித்த நபரின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரெஞ்சு தலைநகர் பகுதியில் இந்த கொடூரமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் …

Read More »

இலங்கையில் முடங்கியது முகநூல்

முகநூல் சேவைகளும், அலைபேசிகளினூடான இணைய சேவைகளும் நண்பகலுக்குப் பின்னர் முழு அளவில் முடங்கின. கண்டி மாவட்டத்தில் தொலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு காலை முதல் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், முகநூல் சேவைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன. மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகங்கள், குழுக்களுக்கிடையில் கலவரத்துக்குத் தூபமிடும் வகையில் முகநூல்களினூடாகவும் இன்னபிற அலைபேசியூடான இணைய சேவைகளூடாகவும் …

Read More »

கண்டி கலவரத்தின் பின்புலத்தில் அமெரிக்கா : எதிரணி சந்தேகம்

கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் பின்புலத்தில் அரச தரப்பும், அமெரிக்க இராஜாங்க திணைக்களமுமே இருக்க கூடுமென பொது எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடவில்லை. கட்டாயம் அந்தப் பிரேரணை கொண்டுவரப்படும். ஐ.தே.கவின் …

Read More »

இன்றைய ராசிபலன் 07.03.2018

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 6.55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு. ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் …

Read More »
error: Content is protected!