Friday , March 29 2024
Home / குமார் (page 28)

குமார்

தெலுங்கானா மாநில சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இருந்து சஸ்பெண்ட் – தெலுங்கானா பா.ஜ.க கட்சியினர் கண்டனப் பேரணி

தெலுங்கானா மாநில சட்டசபையில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் இன்று கண்டனப் பேரணி நடத்தினர். தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விகிதத்தை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 5 பேரையும் இரண்டு நாட்கள் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார். சபாநாயகரின் இந்த …

Read More »

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் – உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது. மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது. இது பற்றிய ஆய்வை …

Read More »

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது – அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் புகழாரம்

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது எனவும், திறமையான வீரர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும் அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, உள்நாட்டு போர் நிலவும் நாடுகளில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. இந்த அமைதிப்படையில் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ …

Read More »

காயமடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரியை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபத் கவுரவித்துள்ளார்

இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றம் மீது சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரியை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபத் கவுரவித்துள்ளார். இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் அருகே உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த கட்டிடத்தின் வழியாக காரை வேகமாக ஓட்டி வந்த ஒரு தீவிரவாதி அங்கிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதினான். அதன் பின்னர் பாராளுமன்ற நுழைவு …

Read More »

நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் குட்டிக்கரணம் அடித்த குட்டி விமானம்

நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் அதை கடக்க முயன்ற சிறிய விமானம் குட்டிக்கரணம் அடித்து 10 ஆயிரம் அடிவரை கீழ் நோக்கி சென்றதாகவும் அதில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது. எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 சம்பவத்தன்று துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. …

Read More »

சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக டிரைவர் இன்றி இயங்கும் சுரங்க ரெயில் சேவை தொடக்கம்

சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக டிரைவர் இன்றி தானாக இயங்கும் சுரங்க ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ரெயில்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா ரெயில் சேவையில் சிறந்து விளங்குகிறது. புல்லட் ரெயில், சுரங்க ரெயில் சேவையில் அதிவிரைவான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு டிரைவர் இன்றி தானாக இயங்கும் சுரங்க ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் யங்பாங்கில் …

Read More »

அமெரிக்காவில் தாய் மற்றும் மகன் படுகொலையில் கணவர் மீது சந்தேகம்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் தாய் மற்றும் மகன் படுகொலை வழக்கில் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஹனுமந்தராவ் (45). இவரது மனைவி நாரா சசிகலா (40). இவர்களுக்கு அனீஸ் சாய் என்ற 7 வயது மகன் இருந்தான். இவர்கள் அமெரிக்காவின் நியூஜெர்சியில் பர்லிங்டன் நகரில் ஒரு அடுக்கு மாடி வீட்டில் தங்கியிருந்தனர். கணவன்-மனைவி இருவரும் ‘சாப்ட்வேர்’ என்ஜினீயர் ஆக பணிபுரிந்தனர். நாரா சசிகலா …

Read More »

சட்டசபையில் எண்ணிக்கையில் திமுக முதலிடம் பெறுகின்ற காலம் விரைவில் வரும் – தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: சட்டசபையில் எண்ணிக்கையில் திமுக முதலிடம் பெறுகின்ற காலம் விரைவில் வரும். எதிர்கட்சி வரிசையில் இருந்தலும் சட்டசபையில் மக்கள் நலனுக்காக செயல்படுவோம். சட்டசபை போல் மக்கள் மன்றத்திலும் செயல்படுவோம். சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு மாதம் பட்ஜெட் தொடர் நடத்தப்பட வேண்டிய நிலையில், ஒரு …

Read More »

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைஅச்சர் அருண்ஜெட்லியிடம் விஷால், பிரகாஷ் ராஜ் கோரிக்கை

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைஅச்சர் அருண்ஜெட்லியிடம் விஷால், பிரகாஷ் ராஜ் கோரிக்கை வைத்தனர். வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் …

Read More »

தக்கலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் – தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

தக்கலை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் 24.3.2017 அன்று ஸ்ரீ அய்யப்பா …

Read More »