Monday , April 23 2018
Home / குமார்

குமார்

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலியப் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். 1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று …

Read More »

ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி

ஏமன் நாட்டின் டைஸ் பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான …

Read More »

ஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்டார். காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் 91 …

Read More »

கோவையில் ரூ.18½ கோடிக்கு சூதாட்டம் – ஆன்லைன் லாட்டரி கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் தலைமறைவு

கோவையின் ஆன்லைன் மூலம் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பல் குறித்து போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வெள்ளளூரை சேர்ந்த கார்த்திகேயன், கனகராஜ், ரங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8½ லட்சம் ரொக்கப்பணம், ஒரு கார், 2 லேப்டாப், 8 செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கும்பல் கடந்த 1 …

Read More »

சுவீடன் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி

5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி சுவீடன் பயணத்தை முடித்துகொண்டு பிரிட்டன் வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் போய்ச் சேர்ந்தார். அவரை அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சுவீடன் நாட்டின் மன்னர் 16-ம் காரல் …

Read More »

சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல காமெடியன்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கருணாகரனை தொடர்ந்து நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க இருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் …

Read More »

நாசாவின் புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்துவதில் தாமதம்

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழ தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. அதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ‘வாஷிங் மெஷின்’ அளவுள்ள இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கேமிராக்கள் …

Read More »

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. …

Read More »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து – ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 40 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா?

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசித்து வருகிறார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால் வருவாய் இழப்பை ஈடு செய்ய, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. சிறப்பு அந்தஸ்து வழங்க, முதலில் சம்மதித்த மத்திய அரசு, பிறகு அதற்கு மறுத்து விட்டது. சுமார் 30 தடவை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு …

Read More »

டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த வசூல் ராஜா

டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம் போலீசிடம் சிக்கியுள்ளார். வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் தினமும் ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஆஜராகும் அத்னான் குர்ராம் அனைவரிடமும் தன்னை ஒரு பயிற்சி டாக்டர் என அறிமுகப்படுத்தியுள்ளார். பயிற்சி …

Read More »
error: Content is protected!