Sunday , April 14 2024
Home / பார்த்தீபன் (page 30)

பார்த்தீபன்

தமிழ் அரசியல் கைதிகளை கைவிடுவதானது தமிழர் அரசியலை கைவிடுவதற்கு சமனாகும்!

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடன் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டு அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தனர். இந்தச் சந்திப்பு …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாம்! – சந்திரிகா அம்மையார் கூறுகின்றார்

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதைத் தேடிப் பார்க்கவேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் அப்படி எவரையும் முகாம்களில் மறைத்து வைக்கவில்லை. அப்போது ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்த இராணுவத்தின் பழக்கத்திற்கேற்ப அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் யாவரையும் கொலை செய்வார்களே அன்றி, இவ்வளவு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு …

Read More »

மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை!

மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை! – அரசிடம் வலியுறுத்துகின்றது ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம்கள் மீதான மத – இன வெறுப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசும் – பொலிஸாரும் உறுதிசெய்ய வேண்டும் என்று, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மாங் தெரிவித்தார். தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, தென்னாபிரிக்கா, சுவிர்சர்லாந்து தூதரகப் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வடக்கு ஆளுநரின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி!

“காணாமல்போனோர் விவகாரத்துக்கு எந்த விசாரணையும் இடம்பெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் கூறுவதற்கு அவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. சட்ட ஏற்பாடுகளை அறியாத ஆளுநர், தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் கருத்துக்கூறுவதை ஏற்க முடியாது.” – இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “காணாமல்போனோர் விவகாரத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்தான் நாடாளுமன்றில் சட்டவரைபு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் தற்போது சில திருத்தங்களுக்காக உள்ளது. அதன்பின்னர் காணாமல்போனோர் அலுவலகம் …

Read More »

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டத்தில் திருத்தம்! – செவ்வாயன்று வருகின்றது சபைக்கு

காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அறியமுடிகின்றது. நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் எனவும், அதன் பின்னர் விரைவில் காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்படக் கூடும் எனவும் இதனுடன் தொடர்புடைய தரப்பினர் தெரிவித்தனர். காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டவரைபு நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முன்வைத்த திருத்தம் உள்ளடக்கப்படவில்லை …

Read More »

வாக்குகளுக்காக அரசியல்வாதிகள் சுயநலம்; அதுவே அனர்த்தங்களுக்கு முக்கிய காரணம்! – சீறுகின்றார் மைத்திரி

“அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்துச் செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அரசு விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றிகொள்வதற்கு அரசியல்வாதிகள் சிலர் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரியவைத்து அரசின் …

Read More »

ஜப்பான் பறந்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்குச் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 07.15 மணிக்கு இலங்கையிலிருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன. ஜப்பானிலுள்ள இலங்கையர்கள் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த விஜயத்தில் ரொஷான் ரணசிங்க, பியல் நிஷாந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

Read More »

வடக்கில் வறட்சி! – நான்கரை இலட்சம் குடும்பங்கள் பரிதவிப்பு

இலங்கையின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வறட்சி நீடிப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் அறிவித்துள்ளது. வடக்கில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 40 ஆயிரத்து 531 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 20 பேரும், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 21 …

Read More »

இயற்கை அனர்த்தம்: பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்வு! – 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 203ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 264 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 31 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 96 பேர் காணாமல்போயுள்ளனர். ஆயிரத்து 508 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்து 617 வீடகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்துள்ள 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 368 …

Read More »

இரண்டு மாதங்களுக்குள் மயிலிட்டியை விடுவிப்பதாக தேசிய அரசு உறுதி! – மாவை எம்.பி. தெரிவிப்பு

“வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டிப் பிரதேசம் 2 மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் என்று தேசிய அரசு உறுதி வழங்கியுள்ளது.” – இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்இதார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மீள்குடியேற்றம் விடயம் குறித்துப் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “வலிகாமம் வடக்கு …

Read More »