Sunday , April 14 2024
Home / பார்த்தீபன் (page 3)

பார்த்தீபன்

இடைக்கால அறிக்கை 21ஆம் திகதி வெளியாகும்! – அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்று அன்று கூடும்

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக இதுவரை செயற்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழு, சுமார் எழுபதுக்கும் அதிகமான தடவைகள் கூடித் தயாரித்த இடைக்கால அறிக்கை, நீண்ட இழுபறிக்குப் பின்னர் முழு அளவில் இறுதி செய்யப்பட்டு, குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்போது அங்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் அது சமர்ப்பிக்கப்படும். அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டடல் குழு கொழும்பில் எழுபத்து மூன்றாவது தடவையாக பிரதமர் ரணில் …

Read More »

கூட்டமைப்பின் கோட்டைக்குள் மலரத் துடிக்கிறது மஹிந்த அணி! – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் பஸில் இரகசியப் பேச்சு

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற வடக்கு மாகாணத்தில் கால்பதிப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மஹிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறிவைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்துவருகின்றது. இதன்படி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் உட்பட வடக்கிலுள்ள சுமார் 30இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் கொழும்பில் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது மஹிந்தவுடன் இணைந்து அரசியல் பயணத்தை …

Read More »

ஜகத் ஜயசூரியவால் விசாரணை வலைக்குள் சிக்கியது பிரேஸில் அரசு!

போர்க்குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு நியமனம் வழங்கிய தவறுக்காக பிரேஸில் அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை வலைக்குள் சிக்கியிருப்பதாக அறியமுடிகின்றது. முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரியவை இலங்கைக்கான தூதுவராக நியமித்ததன் மூலம் போர்க்குற்றவாளி ஒருவருக்கு இராஜதந்திர சிறப்புரிமைக்குள் நியமனத்தை வழங்கி பிரேஸில் அரசு தவறிழைத்திருப்பதாக தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் …

Read More »

எதற்கும் அஞ்சாதீர்! – ஜகத்துக்கு ஆறுதல் கூறிய கோட்டா

கோத்தபாய

“எதற்கும் அஞ்சவேண்டாம். போர்க்குற்ற விசாரணைக்கு முகங்கொடுக்கவேண்டிவரின் உங்களுடன் நான் இருப்பேன்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ. பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜகத் ஜயசூரியவுக்குச் சார்பாக பலரும் ஆதரவுக்குரல் எழுப்பிவருகின்றனர். அவர் மீது கைவைக்க இடமளிக்கமாட்டார் என …

Read More »

ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உடன் விசாரணை அவசியம்! – கூட்டமைப்பு வலியுறுத்து 

கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணை

போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உரிய விசாரணை உடன் அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரின்போது இடம்பெற்ற போர்க்ககுற்றங்கள் தொடர்பில் உரிய நீதி விசாரணை நடத்தப்படும் என்று …

Read More »

குப்பையைக் கிளறாதீர்! – பொன்சேகா மீது சம்பிக்க பாய்ச்சல்

“போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு விரலை நீட்டினால் மீதி நான்கு விரல்களும் தன் பக்கம்தான் திரும்பியுள்ளன என்பதை சரத் பொன்சேகா மறந்துவிடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க. அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்? விடுதலைப்புலிகள் அமைப்பின் நெடியவன், …

Read More »

பொன்சேகா விவகாரம்: நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் கூட்டமைப்பு!

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவந்தால் அதற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகவும் செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் கடந்த வாரம் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் …

Read More »

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவோம்! – மஹிந்த அணி திட்டவட்டம் 

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தயாராகி வருகின்றது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தமிழ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரேரணை மூலம் சரத் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து எதிர்ப்பு …

Read More »

20 ஆவது திருத்தம் அடியோடு மாற்றம்! – அரசுத் தலைமை முடிவு; உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின் வடிவத்தை அடியோடு மாற்றுவதற்கு அரசு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தீர்மானித்தது. சகல மாகாண சபைகளையும் இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்து சரியாக ஒரு வருடத்தில் கலைக்கவும், அதன் பின்னர் ஒரே நாளில் சகல சபைகளுக்குமான தேர்தலை நடத்தவும் புதிய திருத்த வடிவம் வழி செய்கின்றது. அதன் பின்னர் மாகாண சபை ஒன்று முற்கூட்டியே கலைக்கப்படும் சூழல் நேருமானால் அந்த மாகாண சபையின் எஞ்சிய ஆட்சிக் காலத்துக்கான நிர்வாகத்துக்கென …

Read More »

மைத்திரியின் ‘போர்க்குற்ற’ அறிவிப்பால் மேற்குலக தூதுவர்கள் அதிருப்தி! கொழும்பில் கூடி அவசர ஆய்வு!! – ஜெனிவாத் தொடரிலும் ‘தலையிடி’யாக மாறும் அபாயம் 

படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பால் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எனவே, இலங்கையின் சமகாலப்போக்கு, ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு காட்டும் ஆர்வம் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் இவ்வாரம் கூடவுள்ளனர் எனப் பெயர்க் குறிப்பிட விரும்பாத மேற்குலகின் மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி …

Read More »