Thursday , March 28 2024
Home / பார்த்தீபன் (page 2)

பார்த்தீபன்

கொழும்பு பீஜிங் நெருக்கத்தால் டில்லி அதிருப்தி! மஹிந்தவை இந்தியாவுக்கு ஒக். 14இல் அழைக்கிறது மோடி அரசு!!

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் – பிரசன்னம் அதிகரித்துவருவதால் கடும் அதிருப்தியில் இருக்கும் இந்திய அரசு, கொழுப்பு அரசை தம்பக்கம் வளைத்துப்போடுவதற்காக தீவிர இராஜதந்திர வியூகங்களை வகுத்துவருகின்றது. இதன் ஓர் அங்கமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு அழைத்துள்ள மத்திய அரசு, அவருடன் முக்கிய பேச்சில் ஈடுபடவுள்ளது. இந்தச் சந்திப்பு அடுத்த மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறவுள்ளது. இந்து சமுத்திர வலயத்தில் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையின் வெளிவிவகாரக் …

Read More »

ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து 21இல் இலங்கை நாடாளுமன்றில் விவாதம்!

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.   இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுவரவுள்ளது.   செப்டெம்பர் மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 21ஆம் திகதி அரசமைப்பு சபையின் வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய  தினம் சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரே மேற்படி …

Read More »

புதிய அரசமைப்பு தொடர்பில் டில்லியிடம் இலங்கை ‘கப்சிப்’! – இருதரப்பு உறவு பலமாகவே உள்ளது என்று மாரப்பன தெரிவிப்பு

“புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு நான் எதுவும் விளக்கமளிக்கவில்லை. அதற்கு இன்னமும் காலஅவகாசம் உள்ளது. ஆனாலும் பாதுகாப்பு, பொருளாதார, சிநேகபூர்வ விடயங்கள் குறித்துப் பேசினோம். பிராந்திய அரசியல் குறித்தான விடயத்தில் இந்தியா தெளிவாக உள்ளது. அதனால்தான் எங்களுடன் நெருக்கமாகவும் உள்ளது. கொழும்பை புதுடில்லி நன்கு புரிந்துவைத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கான உத்தரவாதத்தை என்னிடம் தந்தார்.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் வெளிவிவகார அமைச்சர் திலக் …

Read More »

புதிய அரசமைப்பு மீது நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு!

புதிய அரசமைப்பு மீது எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அந்தக் காலஎல்லையை இலக்குவைத்து புதிய அரசமைப்பை தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ள அரசு, இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. புதிய அரசமைப்பை 2017 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுமீது இராஜதந்திர மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றாவிட்டால் இனி …

Read More »

சர்வஜன வாக்கெடுப்புக்கு சம்பந்தன் பச்சைக்கொடி!

“புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசிடமும் தெளிவுபடுத்தியுள்ளோம்.” –  இவ்வாறு தெரிவித்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். “புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் காலம், பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் காலம் என்பன குறித்து எங்களுக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது. அவை உரிய முறைப்படி நடக்குமென எதிர்பார்க்கிறோம். ஆனாலும், சர்வஜன …

Read More »

சம்பந்தனை அழைக்கிறார் கோட்டா! – ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் பெருமெடுப்பில் கண்டியில் 

புதிய அரசமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உதயமாகியுள்ள ‘எலிய’ அமைப்பின் அடுத்த கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தான் அழைப்பு விடுக்கவுள்ளார் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ‘எலிய – ஒளிமயமான அபிலாஷைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு அறிமுகம் செய்யும் நிகழ்வு பாதுகாப்பு …

Read More »

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர நினைவுத்தூபி! – அநுராதபுரத்தில் அமைப்பது பற்றி பரிசீலிப்பு என்கிறார் ருவான்

போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபியை அமைப்பதற்குரிய முழு ஆதரவையும் அரசு வழங்கும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்றில் அறிவித்தார். போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக நினைவுத்தூபியொன்றை அமைக்கவேண்டுமெனக் கோரி ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரின்போது தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் தமது உறவுகளை …

Read More »

’20’ ஐ திருத்தங்களுடன் மாகாண சபைகளில் களமிறக்கியது அரசு! – அடுத்த வாரம் விசேட அமர்வு

திருத்தியமைக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசு மீண்டும் அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பில் விவாதித்து – தீர்மானமொன்றை எடுப்பதற்காக அடுத்த வாரம் சகல மாகாண சபைகளும் விசேட அமர்வை நடத்தவுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கும், தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கும் வழிவகுக்கும் வகையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை தேசிய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்து, …

Read More »

தேசிய அரசின் ஆயுள் முடிவு! அமைச்சர்களும் பதவி இழப்பு!! – ஜே.வி.பி. விளக்கமளிப்பு

தேசிய அரசமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளதால் அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 ஆகக் குறைக்குமாறு ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சபையில் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் (46)ஆவது ஷரத்தின்பிரகாரம் தேசிய அரசு அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30இலிருந்து 48 ஆகவும், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை …

Read More »

படையினரை சிறைக்கு அனுப்பாது நல்லாட்சி! – கிரியெல்ல திட்டவட்டம்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல என்றும், எந்தவொரு படைத்தளபதியையும் நல்லாட்சி அரசு சிறையில் அடைக்காது என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளையின் 23/2இந்த கீழ் மஹிந்த அணியான பொது எதிரணியின் எம்.பி. தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் அரசின் மேற்படி நிலைப்பாட்டை …

Read More »