Friday , March 29 2024
Home / பார்த்தீபன்

பார்த்தீபன்

மொட்டு எம்.பியை விரட்டியடித்த மக்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவை மக்கள் திரண்டு விரட்டியடித்துள்ளனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றின் பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தம்புத்தேகம, கொன்வெவ கிராமத்துக்கு இன்று (02) சென்றிருந்தபோது அங்கு ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எஸ்.எம். சந்திரசேன எம்.பி. மற்றும் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உள்ளிட்ட சிலரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த குறித்த …

Read More »

தாயக மண்ணில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது திலீபனின் நினைவேந்தல் வாரம்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப் படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வு தாயக மண்ணில் நேற்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வார நிகழ்வு நல்லூர் தெற்கு வீதியில் …

Read More »

பாரதப் படைகளுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்தி பார்போற்ற சரித்திரம் படைத்த பார்த்தீபனின் நினைவேந்தல்! – உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பம்

இந்திய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக 12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின்றது. இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் பாரதப் படைகளுக்கு எதிரான பட்டினிப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு நடத்தினார். செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான உண்ணாவிரதப் …

Read More »

ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை மனதார வரவேற்கின்றது கூட்டமைப்பு! – அரசு மந்தப் போக்கில் தொடர்வது மாபெரும் தவறு எனவும் சுட்டிக்காட்டு

இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்றுள்ளது. இனியும் விதண்டாவாதக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்காமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுத் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு …

Read More »

ஐ.நா. ஆணையாளரின் கருத்து அபத்தமானது! – அடியோடு நிராகரிக்கின்றது இலங்கை அரசு

இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, இவை அபத்தமானதும், அபாண்டமானதெனவும் சாடியுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன், 36ஆவது கூட்டத்தொடரின் …

Read More »

ஐ.நா. உரை குறித்து அமைச்சரவையில் மைத்திரி விளக்கம்!

அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 26ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருப்பதால் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேற்படிக் கூட்டத்தை நடத்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்குச் செல்வது மற்றும் அந்த விஜயம் குறித்து ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறிய விளக்கமொன்றை அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Read More »

புதிய அரசமைப்பு தொடர்பில் சம்பந்தன் – தினேஷ் சந்திப்பு! – விரைவில் கூட்டுப் பேச்சுக்கும் ஏற்பாடு

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்குமிடையில் விரைவில் முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது. பொது எதிரணியின் அழைப்பின்பேரில் இந்தப் பேச்சு கொழும்பில் நடைபெறவுள்ளது எனவும், இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் ஆராயப்படும் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்தப் பேச்சுக்கான அழைப்பை விடுத்துள்ளார் …

Read More »

இலங்கையில் 81 சிறுவர்கள் உட்பட 2,688 பேருக்கு எயிட்ஸ்!

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டு முடிவில் நாட்டில் மொத்தமாக 2,688 பேருக்கு எயிட்ஸ் நோய் பீடித்திருக்கின்றது எனவும், அவர்களில் 81 பேர் சிறுவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் பால்வினை நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த 2,688 நோயாளிகளில் ஒருவர் மாத்திரம் மரணமடைந்துள்ளார். இலங்கையில் எயிட்ஸ் நோய் வெகுவாகக் குறைந்திருந்தபோதிலும் அது இப்போது படிப்படியாக அதிகரித்துவருகின்றது. மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவை வைத்துக்கொள்வதே இந்த …

Read More »

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு? – பிரிட்டன் தூதுவருடன் சம்பந்தன் பேச்சு 

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவிக்கையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் …

Read More »

ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி: சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே சாத்தியம் என்கிறார் விக்கி!

“கடந்த அரசின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வகையிலான சட்டம் விடுபாட்டு நிலையில்  காணப்படுகையில் இவை தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதற்கும், நீதியின்’முன் நிறுத்துவதற்கும் சர்வதேசத்தின் அழுத்தம் முக்கியமானது”  என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் கொலைகுறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தால் நன்று என்ற கருத்தையும் முதலைமைச்சர் வெளிப்படுத்தினார். …

Read More »