Friday , April 19 2024
Home / அருள் (page 137)

அருள்

ரஜினி,கமலுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க திரையுலகில் ஜொலித்து அரசியல் உலகில் கால் எடுத்து வைத்துள்ள ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் திமுக சார்பில் திமுக பிரமுகர்கள் நேரில் சென்று இன்று அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வருகிற 16 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. …

Read More »

மைத்திரிக்கு நெருக்கமானவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒவ்வாமை பிரச்சினை ஒன்று இருப்பதாக, அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை ஒரு வாரத்தில் தீர்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் இதில் எனக்கு நம்பிக்கையில்லை. 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் …

Read More »

மஹிந்தவிற்கும் – ரணிலிற்கும் இடையில் அவசர கலந்துரையாடல்

மகிந்தவிற்கு

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைபேசியூடாகவே இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், மதத்தலைவர் ஒருவரின் முயற்சியின் பயனாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமான எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான …

Read More »

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 181.2 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன் கொள்முதல் பெறுமதி 177.5 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Read More »

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த ஐதேக முக்கியஸ்தர்கள்

ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை இன்று சந்தித்து ஜனாதிபதியின் கடும் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர் ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கு எடுத்துரைத்துள்ளனர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள போதிலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறித்துள்ளார் என ஐக்கியதேசிய கட்சித்தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர். 117 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதையும் ஐதேக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More »

மக்களிடம் தவறான தகவலை வழங்கும் சபாநாயகர்!

“தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக காட்டிக் கொண்டு சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குகிறார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல,“சபாநாயகர் தமது அதிகாரத்தை மீறி செயற்படுவதாலேயே ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கிறார். இக் காலங்களில் பாராளுமன்றில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனினும் அவர் அரச ஊடக …

Read More »

மகிந்த வீட்டில் கூடிய சட்டதரணிகள்! காரணம் என்ன?

சட்டத்தரணிகளுக்கும் நாடாளுமன்ற ஊறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜப்பக்ஸவின் இல்லத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை தொடர்பிலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

Read More »

இன்றைய ராசிபலன் 06.12.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர் சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள்  வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை …

Read More »

12ஆம் திகதி ரணில் பிரதமர்? அதிரடி நடவடிக்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேணை ஒன்றை சஜித் பிரேமதாஸ முன்மொழியவுள்ளார். குறித்த நம்பிக்கை பிரேணையை எதிர் வரும் 12ஆம் திகதி சபையில் சஜித் பிரேமதாஸ சமர்ப்பிக்கவுள்ளார். குறித்த நம்பிக்கை பிரேணை எதிர் வரும் தினங்களில் பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

ஜனாதிபதிக்கு எதிராக வலுப்பெறும் எதிர்ப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நளை பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள சுற்றுலாத்துறை விருது வழங்கும் விழாவை சிலர் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாத்துறை சார் தலைவர்கள் சிலரே இவ் விழாவை ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து குறித்த விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More »