Friday , March 29 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 30.09.2018

இன்றைய ராசிபலன் 30.09.2018

மேஷம்: உணர்ச்சிப்பூர் வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகப்பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர் கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துநீங்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

கடகம்: ஆன்மிகப் பெரி யோரின் ஆசி கிட்டும். பெற் றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்: சொன்ன சொல் லைக் காப்பாற்றத் துடிப்புடன்செயல்படுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களைசந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக் கும்.பணப்புழக்கம் கணிசமாக   உயரும். நீண்ட நாட்களாகதள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். மற்றவர்களைப் பற்றிவீண் விமர்சனங்களை தவிர்ப் பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோ கத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: புதிய எண்ணங் கள் செயல் வடிவம் பெறும்.  மனைவி வழியில்எதிர் பார்த்த உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

 தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உயரதி  காரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாய மும் உண்டு. புது வேலைஅமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்…

மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அதிசயிக் கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv