Thursday , April 25 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 25.04.2018

இன்றைய ராசிபலன் 25.04.2018

மேஷம்: உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் குழுவில் செயல்பட்டால் ஸ்பெஷலான ஒருவரின் பார்வையில் படுவீர்கள். இன்று உங்கள் கலைநயமிக்க, கிரியேட்டிவ் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாக அளவளாவி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். மாலையில் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள், அது நிறைய நல்லதை செய்யும். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார்.

மிதுனம்: அபரிமிதமான முயற்சி மற்றும் உரிய நேரத்தில் குடும்பத்தினர் அளிக்கும் ஆதரவால், விரும்பிய ரிசல்ட்கள் கிடைக்கும். ஆனால் இப்போதைய உற்சாகம் தொடர்ந்திட தொடர்ந்து உழைத்துக் கொண்டிருங்கள். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் – முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களில் சிலர் உங்களை நெருக்கமாக கவனித்து உங்களையே ரோல் மாடலாகவும் கருதுகிறார். உங்கள் நற்பெயரை அதிகரிக்கும் வகையில் பாராட்டத்தக்க செயல்களை மட்டுமே செய்யுங்கள். நியாயமான தாராளமான அன்புக்குப் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். பிசினஸ் நிமித்தம் மேற்கொண்ட திடீர் பயணத்துக்கு பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். விட்டுக்கொடுத்து வாழவது தான் திருமண வாழ்க்கை என நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால் திருமணம் தான் உங்கள் வாழ்வில் நடந்து மிக இனிமையான சம்பவம் என்றும் நீங்கள் இன்று அறிவீர்கள்.

கடகம்: உங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். மத இடம் செல்வது அல்லது துறவி ஒருவரை சந்திப்பது உங்களுக்கு ஆறுதலையும் மன அமைதியையும் கொடுக்கும். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் தூனயுடன் ஏற்படும் வாக்குவாதம் இன்று வேறு திசையை நோக்கி செல்லக்கூடும்.

சிம்மம்: உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். நிச்சயமாக பண நிலைமை மேம்படும். ஆனால் குடும்பத்தில் ஒரு குழந்தையின் உடல் நலனுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். பயணம் ரொமாண்டிக் தொடர்பை வளர்க்கும். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.

கன்னி: தாயாகப் போகும் பெண்கள் தரையில் நடக்கும் போது கவனம் தேவை. இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். உறவினர்களுடன் செலவிடும் நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தை இன்று உங்களின் ரொமான்சை கெடுத்துவிடும். நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

துலாம்: முந்தைய முயற்சிகளின் மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். இன்று பதற்றமாகவே வைத்திருக்கும். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. உங்களுக்கும், துணைவருக்கும் இடையில் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது உங்கள் நீண்டகால உறவுக்கு நல்லதாக இருக்காது.

விருச்சிகம்: உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது – அல்லது ஷாப்பிங் செய்வது மிகுந்த ஆனந்தம் தருவதாகவும் உற்சாகமாகவும் இருக்கும். காதலின் வலியை உணர்வீர்கள். தீடீரென ஆபீசில் உங்கள் எனர்ஜி குறைந்தது போல தோன்றலாம். இதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் குடும்பத்தாரால் துணைவியுடன் மன வேற்றுமை ஏற்படலாம். ஆனால் நீங்கள் இருவரும் அதனை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.

தனுசு: திணிக்கக் கூடிய பிடிவாதமான இயல்பை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். குறிப்பாக பார்ட்டிகளில். அது பார்ட்டியில் உங்கள் மனநிலையைக் கெடுத்துவிடும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள்தான் மையமானவராக இருப்பீர்கள். காதலிலேயே எப்பொதும் மூழ்கியிருப்பவர்களுக்கு மட்டுமே காதலின் இசை கேட்கும். இன்று அந்த இசையை கேட்டு இந்த உலகில் உள்ள மற்ற எல்லா பாடல்களையும் மறந்துவிடுவீர்கள். அபீசில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். இன்று, மனதுக்கினியவருடன் பொழுதை கழிப்பது எத்தனை இன்பமானது என்பதை அறிவீர்கள்.

மகரம்: உங்கள் விருப்பத்தின்படி குழந்தைகள் நடக்க மாட்டார்கள் – அது உங்களை ஆத்திரம் அடையச் செய்யலாம். கட்டுப்படுத்தாக கோபம் வழக்கமாக எல்லோரையும் காயப்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்த்திடுங்கள். கோபம் அடைபவரையும் அது பாதிக்கும். ஏனெனில் அது சக்தியை வீணடித்து நியாயத்தைக் கண்டுபிடிக்கும் தன்மையைக் குறைக்கும். அது பிரச்சினையை பெரிதாக்கத்தான் உதவும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். உங்களை கீழே இழுத்துவிட முயற்சிக்கும் நபர்களைக் கையாள்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் ஒரு நல்லதை செய்யும்போது காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும். நிறைய சாதிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது – எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.

கும்பம்: வாழ்க்கையில் தாராளமான மனப்போக்கை உருவாக்குங்கள். உங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி புகார் சொல்லுவதும் மனம் உடைந்து போவதும் எந்தப் பயனையும் தராது. பிச்சைக்காரனைப் போன்ற சிந்தனைதான் வாழ்வின் நறுமணத்தை அழித்து, போதும் என்ற எண்ணத்துடன் வாழ்வதையும் அழிக்கிறது. உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் உங்கள் துணைவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் சிறிய பிரச்சினை எழுந்து வீட்டில் அமைதியைக் கெடுக்கலாம். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. இன்று, திருமண பந்த்த்தின் அருமையை பல விதத்திலும் உணருவீர்கள்.

மீனம்: உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சற்று பின்னடைவாக உணர்வீர்கள் – சிறிது ஓய்வும், சத்துமிக்க உணவும் உங்கள் சக்தியை அதிகரிக்க நிறைய உதவியாக இருக்கும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிட நேரம் கிடைக்கும். உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் திருமண வாழ்வின் ஒரு இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …