Tuesday , October 23 2018
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 24.09.2018
இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 24.09.2018

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங் களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப் பீர்கள். பிள்ளைகள் கேட்ட தை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக் கூடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

கடகம்: மாலை 6.24 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 6.24 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ் வீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்ப டைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்க ளில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.  வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உற வினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: மாலை 6.24 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பான்மை தலைத் தூக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலை 6.24 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

Check Also

அரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை

கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்குவந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், …

error: Content is protected!