Monday , October 15 2018
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 23.09.2018
இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 23.09.2018

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியைமேலதிகாரி ஆதரிப்பார். சிறப்பான நாள்.

ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்குவரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலை களை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச் சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில்  அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரக்கூடும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

 சிம்மம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனைவிவழி உறவினர்க ளின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார்.வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும்நாள்.

துலாம்: குடும்பத்தின் அடிப் படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூ பத்தை புரிந்துக் கொள் வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.மகளுக்கு நல்ல வரன்அமையும். புது வேலைஅமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். விருந்தினர் களின் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

 மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். வியாபாரத்தில் புது  ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியா மல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப் படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: மறைமுக விமர்ச னங்களும், தாழ்வு மனப் பான்மையும் வந்து நீங்கும்.பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய் வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 15.10.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …

error: Content is protected!