Friday , September 21 2018
Breaking News
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 18.08.2018
இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 18.08.2018

மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத் துவம் தருவார்கள். அமோகமான நாள்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

கடகம்: பழைய உறவுகளை புதுப்பிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்: மாலை 4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டா தீர்கள். கொஞ்சம் சிக்கன மாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மாலை 4.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

மகரம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமா கப் பேசுவீர்கள், செயல்படு வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம்: மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

Check Also

பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை

error: Content is protected!