Thursday , November 23 2017
Home / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் I 12.11.17

இன்றைய ராசிபலன் I 12.11.17

மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

Loading…


ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர் களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும் பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

கன்னி: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். போராடி வெல்லும் நாள்.

துலாம்: அதிரடியாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடை வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் செழிக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத் திற்கு ஆளாக்குவார்கள். சில விஷயங் களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

கும்பம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக் கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளை களால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர் கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் இருவரும் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!