Friday , March 29 2024
Home / ராசிபலன் / இன்றைய ராசிபலன் 07.08.2018

இன்றைய ராசிபலன் 07.08.2018

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வியாபாரத்தில் அதிக அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்: எதிர்காலம் பற்றிய பயம், கவலைகள் வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

தனுசு: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். துணிச்சலான முடிவுகளெடுக்கும் நாள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv