Wednesday , March 27 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தகவலறியும் சட்டம்: அஷ்ரஃப்பின் மரணம் குறித்த புலனாய்வு அறிக்கை கோரினார் பஷீர்

தகவலறியும் சட்டம்: அஷ்ரஃப்பின் மரணம் குறித்த புலனாய்வு அறிக்கை கோரினார் பஷீர்

தகவலறியும் சட்டம்: அஷ்ரஃப்பின் மரணம் குறித்த புலனாய்வு அறிக்கை கோரினார் பஷீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ள மேற்படி விண்ணப்பத்தில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ கீழ் தனக்கு அப்பிரதியை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிடக் கோரி, பஷீர் சேகுதாவூத் இதற்கு முன்னரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் புதிதாக அமுலுக்கு வந்துள்ள ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ கீழ், அவ்வறிக்கையின் பிரதி தனக்கு வழங்கப்பட வேண்டும் என, அவர் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை - மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்  பெற்றிருந்தாலும் வடக்கு மற்றும் …