Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றுமொரு மனு

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றுமொரு மனு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடுமாறுக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை தம்பர அமில தேரர் தாக்கல் செய்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தமை 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேரின் பெயர்கள் இடப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv